News January 11, 2026
கரூர்: மழையால் மின்தடையா? CALL பண்ணுங்க

கரூரில் இன்று (ஜனவரி 11) காலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த மழையினால் உங்கள் வீட்டிலோ அல்லது உங்கள் தெருவிலோ திடீரென மின்தடை ஏற்பட்டால், பொதுமக்கள் கவலைப்படத் தேவையில்லை. உடனடியாக தமிழ்நாடு மின்சார வாரியத்தின் (TNEB) பிரத்யேக நுகர்வோர் சேவை எண்ணான 94987-94987 என்ற எண்ணைத் தொடர்புகொண்டு புகார் அளிக்கலாம். இதன் பின்னர் மின்சாரம் சீரமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News January 29, 2026
அய்யர்மலை: திருமண வீட்டில் ஜோடி கைது!

கரூர் மாவட்டம் அய்யர்மலை திருமண மண்டபத்தில் மொய் பணத்தைத் திருட முயன்ற தேனி மாவட்டத்தைச் சேர்ந்த வேல்முருகன் மற்றும் பாண்டியம்மாள் ஆகிய இருவரை பொதுமக்கள் கையும் களவுமாகப் பிடித்தனர். இது குறித்து ராமசாமி அளித்த புகாரின் பேரில், குளித்தலை போலீசார் வழக்குப் பதிவு செய்து இருவரையும் இன்று கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
News January 29, 2026
அறிவித்தார் கரூர் கலெக்டர்!

கரூர் மாவட்ட வருவாய் அலுவலர் அவர்கள் தலைமையில், கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நாளை 30.1.26 ஆம் தேதியன்று மாலை 4.00 மணியளவில் எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது. எரிவாயு நுகர்வோர்கள் மேற்படி நாளில் நடைபெறும் குறைதீர் கூட்டத்தில் கலந்துகொண்டு எரிவாயு விநியோகத்தில் ஏற்படும் குறைகள் தொடர்பான புகார்களை தெரிவிக்கலாம் என ஆட்சித்தலைவர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.
News January 29, 2026
கரூர் மாவட்ட இரவு ரோந்து காவலர்கள் விவரம்!

கரூர் மாவட்டத்தில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், குற்றச் செயல்களைத் தடுக்கவும் இரவு நேர ரோந்துப் பணிக்குச் சிறப்பு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். சட்ட ஒழுங்கைப் பராமரிக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவசரக் காலங்களில் பொதுமக்கள் தங்கள் பகுதி காவல் அதிகாரிகளை நேரடியாகத் தொடர்பு கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.


