News January 11, 2026

அவருக்கு பதில் இவர்.. BCCI அறிவிப்பு

image

காயம் காரணமாக நியூசிலாந்துக்கு எதிரான ODI தொடரில் இருந்து விலகிய ரிஷப் பண்டுக்கு பதிலாக மாற்று வீரரை BCCI அறிவித்துள்ளது. முதல் ODI இன்று நடைபெறவுள்ள நிலையில், பயிற்சியின்போது பண்டின் விலா பகுதியில் காயம் ஏற்பட்டது. இதனையடுத்து, தொடரில் இருந்து அவர் விலகியுள்ளார். அவருக்கு பதிலாக, மற்றொரு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான துருவ் ஜுரெல் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

Similar News

News February 8, 2026

ராமநாதபுரம்: வாடகை வீட்டில் வசிப்பவரா நீங்கள்?

image

ராமநாதபுரம் மக்களே வாடகைக்கு குடியேற்பவர்கள் இதை தெரிஞ்சுக்கோங்க. ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை உயர்த்த வேண்டும். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கேட்க வேண்டும். 11 மாதங்களுக்கு மேற்பட்ட குத்தகை ஒப்பந்தங்கள் சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும். வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன் அறிவிப்பு தர வேண்டும். இதை மீறுபவர்களை அதிகாரிகளிடம் (1800 599 01234, 044-25268320) புகார் செய்யலாம். SHARE

News February 8, 2026

தங்கம், வெள்ளி விலை.. ஒரு வாரத்தில் குறைந்தது

image

கடந்த வாரத்தில் தங்கம், வெள்ளி விலை ஏற்ற இறக்கங்களுடன் பூச்சாண்டி காண்பித்தது. தங்கம் விலை சவரனுக்கு ₹11,400 வரை குறைந்த அதேநேரத்தில் ₹3,840 உயர்ந்தது. அதேபோல், வெள்ளி விலையும் 1 கிலோவுக்கு ₹40,000 வரை குறைந்த நிலையில், ₹5,000 உயர்ந்தது. தற்போதைய நிலவரப்படி, 1 சவரன் தங்கம் ₹1,15,360-க்கும், 1 கிலோ வெள்ளி ₹2.85 லட்சத்துக்கும் விற்பனையாகிறது.

News February 8, 2026

லவ் மேரேஜ் பண்றவங்களுக்கு என் வாழ்க்கை ஒரு பாடம்..

image

பெற்றோரை எதிர்த்து காதல் திருமணம் செய்யும் அனைவருக்கும் என் வாழ்க்கை ஒரு பாடம். நான் பட்ட பாடு எனக்கு தான் தெரியும் – இவை 2 மகள்களுடன் தற்கொலை செய்த பெண்ணின் கடைசி வரிகள். பல்லாயிரம் கனவுகளுடன் காதல் திருமணம் செய்த பத்மாவை, கணவரின் வேலையில்லா திண்டாட்டமும், கடன் தொல்லையும் இந்த நிலைக்கு தள்ளியுள்ளது. ஆந்திராவின் புத்தூர் பகுதியில் நிகழ்ந்த இச்சம்பவம் பலரையும் துக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.

error: Content is protected !!