News January 11, 2026
EPS-க்கு ஷாக் கொடுத்த அமித்ஷா!

சமீபத்தில் டெல்லி சென்ற EPS-யிடம், அமித்ஷா பல டிமாண்டுகளை அடுக்கியிருப்பதாக தகவல் கசிந்துள்ளது. அதாவது கூட்டணி ஆட்சிதான் எனவும் கேபினட்டில் பாஜகவுக்கு 3 அமைச்சர்கள் பதவி ஒதுக்கப்படவேண்டும் என்றும் அவர் கேட்டதாக கூறப்படுகிறது. குறிப்பாக, அறநிலைய துறை, கல்வி உள்ளிட்ட இலாகாக்களை டெல்லி மேலிடம் விருப்பப் பட்டியலில் வைத்திருக்கிறதாம். இதற்கு EPS பதிலளிக்கவில்லை என விவரமறிந்தவர்கள் சொல்கின்றனர்.
Similar News
News February 12, 2026
3 கோலங்களில் காட்சியளிக்கும் முருகன்.. எங்குமில்லா அதிசயம்

காலையில் குழந்தையாக, மதியம் இளைஞனாக, மாலையில் முதுமையாக முருகன் காட்சி தரும் பாலசுப்ரமணியன் சுவாமி திருக்கோயில், திருவள்ளூர் மாவட்டம் ஆண்டார்குப்பத்தில் அமைந்துள்ளது. இக்கோயிலில் தொடர்ந்து 3 செவ்வாய்க்கிழமைகளில், நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் பதவி உயர்வும், புத்திர பாக்கியமும் கிடைக்குமாம். அருணகிரிநாதர் திருப்புகழில் இக்கோயிலின் முருகனை பற்றி பாடியுள்ளார். இப்பதிவை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.
News February 12, 2026
தவெகவை பார்த்து பயமில்லை: ராஜகண்ணப்பன்

தவெக பெரிய கட்சியாக இருக்கும் என்று நினைத்தேன்; ஆனால் தற்போது அதைப் பார்த்து ஒரு கவலையும் இல்லை என அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார். மதுரை தவெக மாநாட்டுக்கு யார் யார் வருகிறார் என்று வண்டியில் உட்கார்ந்து பார்த்துக் கொண்டிருந்ததாகவும், நான்கு பேர் தான் பெரிய ஆட்களாக இருந்தார்கள், மற்றவர்கள் எல்லாம் 15 வயதுக்குள் இருக்கும் சிறுவர்கள்; அவர்களால் வாக்கு போட முடியாது எனவும் சாடியுள்ளார்.
News February 12, 2026
தவெகவினருக்கு புஸ்ஸி ஆனந்த் எச்சரிக்கை

வந்தவாசியில் தவெக கிழக்கு மா.செ., உதயகுமார் பிறந்தநாள் விழா கொண்டாட்டத்தில் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனையடுத்து, மா.செ., உள்பட 50 பேர் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக நிகழ்ச்சிகளை நடத்தினால், ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று புஸ்ஸி ஆனந்த் எச்சரித்துள்ளார்.


