News January 11, 2026

பிரபல நடிகர் கார்ட்டர் காலமானார்

image

பழம்பெரும் ஹாலிவுட் நடிகர் TK கார்ட்டர்(69) காலமானார். 1976-ல் ஹாலிவுட்டில் அடியெடுத்து வைத்த அவர், THE THINGS, SPACE JAM உள்ளிட்ட படங்கள் மூலம் இந்திய சினிமா ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்திருந்தார். தனது இறுதி காலத்தை கலிஃபோர்னியாவில் கழித்துவந்த அவர், நேற்று காலமானார். இறப்புக்கான காரணம் குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை. கார்ட்டரின் மறைவுக்கு திரைப்பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Similar News

News January 23, 2026

கோயிலில் இருந்து வரும்போது இவற்றை பிறருக்கு தராதீங்க

image

கோயிலில் இருந்து வீட்டுக்கு வரும்போது, இந்த பொருள்களை பிறருக்கு கொடுத்தால், வீட்டிற்கு வரும் தெய்வம் வெளியேறிவிடும் என்பது ஐதிகம். பிரசாதமாக கொடுக்கும் பொருள்கள், அதாவது எலுமிச்சை பழம், பூ, மாலை போன்றவற்றை பிறருக்கு கொடுக்கக் கூடாது. மேலும், கோயிலுக்கு சென்று திரும்பும் போது, யாருக்கும் எந்த தானமும் வழங்கக்கூடாதாம். அதே நேரத்தில், மஞ்சள், குங்குமம், விபூதி போன்றவற்றை பிறருக்கு வழங்கலாம்.

News January 23, 2026

2வது T20: வெற்றியை தொடருமா இந்திய அணி

image

நியூசிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட T20 தொடரின் 2-வது போட்டி இன்று ராய்ப்பூரில் நடைபெறுகிறது. முதல் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்று தொடரை அருமையாக தொடங்கியது. நியூசிலாந்து அணியும் வலுவான நிலையில் இருப்பதால், இந்த போட்டி இந்தியாவுக்கு கடினமாக இருக்க வாய்ப்பு உள்ளது. இருப்பினும் ODI தொடர் போல் இல்லாமல், இதை நிச்சயம் வெல்ல வேண்டும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

News January 23, 2026

இன்று தமிழகம் வருகிறார் PM மோடி

image

NDA கூட்டணியின் பொதுக்கூட்டம் மதுராந்தகத்தில் இன்று மாலை நடைபெறுகிறது. இதில் பங்கேற்க PM மோடி, பிற்பகல் 2:15 மணிக்கு சென்னை வருகிறார். கூட்டத்தில், மோடி NDA கூட்டணி கட்சி தலைவர்களை அறிமுகம் செய்து, பிரசாரத்தை துவக்கி வைக்க உள்ளார். திமுகவுக்கு எதிராக அதிமுக தலைமையிலான NDA கூட்டணியில் பல கட்சிகள் இணைந்துள்ளன. இந்நிலையில் மோடியின் வருகை, கூட்டணிக்கு மேலும் பலம் சேர்க்கும் என அவர்கள் கருதுகின்றனர்.

error: Content is protected !!