News January 11, 2026
விழுப்புரம்: தாயை தாக்கிய கொடூர மகன்!

வடநெற்குணத்தை சேர்ந்த காளியம்மாள் (77) தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இவரது 2வது மகன் ரங்கநாதன் (44), அடிக்கடி மதுகுடிக்க பணம் கேட்டு தொந்தரவு செய்துள்ளார். இதேபோல் நேற்று முன்தினம் பணம் கேட்டபோது, காளியம்மாள் இல்லை எனக் கூறியதால், தாய் என்றும் பாராமல் சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் காளியம்மாள் பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார். பின்னர், ரங்கநாதனை நேற்று போலீசார் கைது செய்தனர்.
Similar News
News February 2, 2026
விழுப்புரம்: திடீர்னு பெட்ரோல் காலியா? இதை பண்ணுங்க!

விழுப்புரம் மக்களே, திடீரென உங்கள் வண்டியில் பெட்ரோல் காலியாகி நிற்பதை விட கொடுமை வேறெதுவும் இல்லை எனலாம். இந்த பிரச்னைக்கு இந்தியன் ஆயில் நிறுவனம் தீர்வு வழங்கியுள்ளது. அந்நிறுவனத்தின்<
News February 2, 2026
திண்டிவனத்தில் நிலத் தகராறு!

விழுப்புரம்: திண்டிவனத்தை அடுத்த ஊறல் கிராமத்தை சேர்ந்தவர் சதாசிவம். இவருக்கு சொந்தமாக நிலம் உள்ளது இந்த நிலத்தின் அருகே அவரது உறவினர் காளியின் நிலமும் உள்ளது. இந்த நிலங்களுக்கு இடையே இரண்டு சென்ட் பொது இடம் உள்ளது. இது தொடர்பாக இரு பிரிவினருக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் சதாசிவத்தை தகாத வார்த்தை கூறியதாக தெய்வபாலன், சிவராஜ், கிருஷ்ணன், உள்ளிட்ட ஏழு பேர் மீது போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.
News February 2, 2026
விழுப்புரம்: இனி Whats app-ல் ஆதார் அட்டை!

விழுப்புரம் மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்யவேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். அல்லது <


