News January 11, 2026

கரூர் துயர வழக்கு.. நாளை டெல்லி செல்கிறார் விஜய்

image

கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் பலியான வழக்கு தொடர்பாக, டெல்லி சிபிஐ அலுவலகத்தில் நாளை காலை 11 மணிக்கு விஜய் ஆஜராகவுள்ளார். சென்னையில் இருந்து தனி விமானத்தில் இன்று அவர் டெல்லி புறப்படுவதாக முதலில் கூறப்பட்டது. இந்நிலையில், நாளை காலை 7 மணிக்கு அவர் புறப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து, வழக்கு தொடர்பாக அனுப்பப்பட்ட சம்மனுக்கு, CBI அதிகாரிகளிடம் விஜய் விளக்கம் அளிக்கவுள்ளார்.

Similar News

News February 20, 2026

வாசனை திறனை இழந்தார் நடிகர் மம்மூட்டி..

image

நடிகர் மம்மூட்டி நடத்தும் கேர் & ஷேர் இன்டர்நேஷனல் பவுண்டேசனின் 16-வது ஆண்டு விழா கொச்சியில் நடைபெற்றது. இதில் செவித்திறன் குறைபாடு உள்ளவர்களுக்கு இலவச ‘Cochlear Implant’ திட்டத்தை தொடங்கிவைத்து பேசிய அவர், நீண்ட காலமாக வாசனை திறனை தான் இழந்திருந்ததாக பேசியுள்ளார். தற்போது அதிலிருந்து மீண்டு வருவதாகவும், ஒரு விஷயம் இல்லாமல் போனால்தான் அதன் அருமை தெரிகிறது என்றும் எமோஷனலாக பேசியுள்ளார்.

News February 20, 2026

நகைக்கடன் தள்ளுபடி.. மக்களுக்கு அதிர்ச்சி

image

5 சவரன் வரையிலான நகைக்கடன்கள் ஏற்கெனவே தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், தற்போது தங்கம் விலை உயர்ந்துள்ளதால், இனி ₹25,000 கோடி வரை நகைக்கடன் தள்ளுபடி செய்ய வேண்டியிருக்கும். ஏற்கெனவே கடன் சுமையில் உள்ள அரசு மீண்டும் இதை செய்தால் மிகப்பெரிய கடனில் சிக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது. இருப்பினும், 2026 தேர்தலிலும் நகைக்கடன் தள்ளுபடி பற்றிய வாக்குறுதிகளை இருகட்சிகளும் அளிக்கும் என கூறப்படுகிறது.

News February 20, 2026

கூட்டணி ஆட்சி சாத்தியப்படாது: துரை வைகோ

image

திமுகவிடம் ஆட்சியில் பங்கு கேட்டு காங்கிரஸ் போராடி வரும் நிலையில், அதனை மதிமுக முன்வைக்காது என துரை வைகோ தெரிவித்துள்ளார். விருதுநகரில் பேசிய அவர், TN அரசியலை பொறுத்தவரை கூட்டணி ஆட்சி என்பது சாத்தியப்படாது என்றும், இன்றைய குழப்பமான சூழ்நிலையில் கூட்டணி ஆட்சி கேட்பது நல்லது கிடையாது எனவும் கூறியுள்ளார். அதேவேளையில் பிற கட்சிகள் ஆட்சியில் பங்கு கேட்பது அவர்களது விருப்பம் என்றும் பேசியுள்ளார்.

error: Content is protected !!