News May 4, 2024

குற்றவாளியை பிடிக்க 7 தனிப்படைகள் அமைப்பு

image

காங்கிரஸ் பிரமுகர் ஜெயக்குமார் கொலை வழக்கில், குற்றவாளியை பிடிக்க 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பேசிய நெல்லை காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன், சமூக வலைதளங்களில் பரவி வரும் புகார் கடிதம் தன்னிடம் அளிக்கப்படவில்லை என்றார். மேலும், இந்த கொலையில் ஈடுபட்டவர்களை விரைவில் கைது செய்வோம் என்று உறுதியளித்தார். 2 நாள்களுக்கு முன்பு காணாமல் போன ஜெயக்குமார், இன்று சடலமாக மீட்கப்பட்டார்.

Similar News

News November 17, 2025

சேலம்: B.E/B.Tech படித்தவர்களுக்கு ரூ.50,000 சம்பளம்!

image

இந்திய ஸ்டீல் ஆணையத்தில் 124 ‘Management Trainee’ காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு B.E/B.Tech படித்த பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.50,000 முதல் சம்பளம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு https://sailcareers.com/sail2025mt/ என்ற இணையதளத்தில் விண்ணபிக்கலாம். டிச.5ஆம் தேதி கடைசி நாளாகும்.
இதனை வேலை தேடும் இன்ஜினியர் மாணவர்கள் அனைவருக்கும் உடனே SHARE பண்ணுங்க!

News November 17, 2025

நாகையில் இலவச மருத்துவ முகாம் அறிவிப்பு

image

இயற்கை மருத்துவ தினத்தை முன்னிட்டு நாகை EGS பிள்ளை கல்லூரி வளாகத்தில் இலவச பொது மருத்துவ முகாம் நாளை (நவ.18) காலை 9.30 மணிக்கு நடைபெற உள்ளது. இதில் சர்க்கரை, ரத்த கொதிப்பு, மூட்டுவலி, தலைவலி, வயிற்றுப்புண், தோல் வியாதிகள், ஆஸ்துமா, சைனஸ், முடக்குவாதம் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு இயற்கை மருத்துவம் மூலம் சிகிச்சை அளிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

News November 17, 2025

எதிர்காலத்தை கணித்தவர் காலமானார்

image

அமெரிக்காவின் பிரபலமான The Simpsons கார்ட்டூனை பலர் பார்த்திருப்பீர்கள். எதிர்காலத்தில் நடக்கவிருப்பதை முன்னதாகவே கணித்து அதனை கார்ட்டூனாக காட்சிபடுத்துவதில்தான் இந்த தொடர் பேமஸ். இந்நிலையில் இந்த கார்ட்டூனை எழுதிய டான் மெக்ராத் (61) பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். 1997-ல் ‘The Simpsons’ தொடரின் ‘Homer’s Phobia’ எபிசோடுக்காக இவருக்கு Emmy விருது கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!