News January 11, 2026
வெனிசுலா எண்ணெய் இனி இந்தியாவுக்குமா?

வெனிசுலாவின் கச்சா எண்ணெய்யை இந்தியாவிற்கு விற்பனை செய்ய டிரம்ப் நிர்வாகம் பச்சைக்கொடி காட்டியுள்ளது. இதற்கான பேச்சுவார்த்தையில் ரிலையன்ஸ் நிறுவனம் ஏற்கனவே ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. ரஷ்ய எண்ணெயை சார்ந்து இந்தியா இருப்பதை USA விரும்பவில்லை என்பதால், இந்த முடிவை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேநேரம், <<18786451>>டிரம்ப்<<>> அறிவித்ததுபோல, இந்த வர்த்தகம் மூலம் கிடைக்கும் பணமும் USA-யிடமே இருக்கும்.
Similar News
News February 5, 2026
முந்தியது அதிமுக.. CM ஸ்டாலின் அதிர்ச்சி

தேர்தல் வாக்குறுதியில் அதிமுக அதிவேகமாக முந்துவதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். குறிப்பாக, குலவிளக்கு திட்டத்தின் கீழ் மகளிருக்கு ₹2,000, ஆண்டுக்கு 3 விலையில்லா கேஸ் சிலிண்டர், கல்விக் கடன் ரத்து என கவர்ச்சிகரமான அறிவிப்புகளை <<19047574>>EPS<<>> வெளியிட்டுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்துள்ள CM ஸ்டாலின், இதைவிட அசத்தல் அறிவிப்புகளை வெளியிட தேர்தல் அறிக்கை குழுவுக்கு அறிவுறுத்தியுள்ளாராம்.
News February 5, 2026
ரேஷனில் இனி பொருள்கள் கிடைக்காதா? முக்கிய அப்டேட்

ரேஷன் கடைகளில் பொருள்களுக்கு பதிலாக பணம் கொடுக்க மத்திய அரசு திட்டமிடுவதாக கூறப்படுகிறது. இத்திட்டத்திற்கு இ-ரூபி என்ற டிஜிட்டல் முறை பயன்படுத்தப்பட உள்ளதாம். இதன்மூலம் மாதம் ஒருமுறை பணத்துக்கான வவுச்சர் பயனாளியின் மொபைலுக்கு வரும். இதனை பணமாக மாற்றி வங்கியில் வைக்கலாம் (அ) பொருளாகவும் வாங்கலாம். குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப வழங்கும் தொகை வேறுபடும் என கூறப்படுகிறது. உங்கள் கருத்து?
News February 5, 2026
BREAKING: தங்கம் விலை சவரனுக்கு ₹4,640 குறைந்தது

தங்கம் விலை சவரனுக்கு ₹22,000 வரை குறைந்த நிலையில், மீண்டும் இந்த வார தொடக்கம் முதல் உயரத் தொடங்கியது. இந்நிலையில், இன்று (பிப்.5) சவரனுக்கு ₹4,640 குறைந்து நகைப் பிரியர்களை இன்ப வெள்ளத்தில் ஆழ்த்தியுள்ளது. 1 கிராம் தங்கம் விலை ₹580 குறைந்து ₹14,320-க்கும், சவரன் ₹4,640 குறைந்து ₹1,14,560-க்கும் விற்பனையாகிறது.


