News January 11, 2026
கிருஷ்ணகிரி: தொழிலதிபர் குத்திக் கொலை – போலீஸ் அதிரடி

கெலமங்கலம், குந்துமாரனப்பள்ளியை சேர்ந்தவர் குரு பிரசாத், கடந்த 7ம் தேதி குத்திக் கொலை செய்யப்பட்டார். பணப் பிரச்னை காரணமாக கொலை செய்யப்பட்டதாக போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் குற்றவாளிகளை தேடி வந்தனர். கர்நாடக மாநிலம் மாதேஸ்வரன் மலையில் பதுங்கி இருந்த சுரேஷ், பாபு, நவீன், தேவராஜ், வெங்கடேஷ் ஆகிய 4 பேரை நேற்று போலீசார் கைது செய்தனர்.
Similar News
News February 16, 2026
கிருஷ்ணகிரி: கேஸ் மானியம் ரூ.300 வேண்டுமா?

கிருஷ்ணகிரி மக்களே, கேஸ் மானியம் ரூ.300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர வேண்டுமா? அதற்கு <
News February 16, 2026
ஒசூர் புதிய மாவட்ட மருத்துவமனை திறப்பு!

ஒசூரில் ரூ.100 கோடி மதிப்பீட்டில் புதிய மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது. இதனை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று (பிப்.16) காலை 10 மணியளவில் காணொலி வாயிலாக திறந்து வைக்கிறார். இப்பகுதி மக்களின் உயர்தர மருத்துவத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில், நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்ட இந்த மருத்துவமனை இன்று முதல் மக்கள் பயன்பாட்டிற்கு வருகிறது.
News February 16, 2026
ஓசூரில் துணிகர சம்பவம்!

கள்ளக்குறிச்சியை சேர்ந்த உதயகுமார் (22) ஓசூரில் பணிபுரிந்து வருகிறார். இவர், நேற்று முன்தினம் மூக்கண்டப்பள்ளி இ.எஸ்.ஐ. ரிங் ரோடு பகுதியில் நின்று கொண்டிருந்த போது, பைக்கில் வந்த நபர் உதயகுமாரை மிரட்டி ரூ.300 மற்றும் செல்போனை வழிப்பறி செய்தார். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் ஓசூர் பிஸ்மில்லா நகரை சேர்ந்த உஸ்மர் (24) என்பது தெரியவந்தது.


