News January 11, 2026

தஞ்சை: மளமளவென பற்றி எரிந்த கடை

image

தஞ்சை கீழவாசல் பகுதியை சேர்ந்தவர் முகமது இஸ்மாயில். இவர் பழைய பஸ் நிலையம் அருகில் துணிக்கடை நடத்தி வருகிறார். இந்நிலையில், நேற்று அதிகாலையில் திடீரென அவரது கடையிலில் தீ விபத்து ஏற்பட்டது. அக்கம் பக்கத்தினர் அளித்த தகவலின் பேரில் விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீயில் கருகி சேதமடைந்ததாக கூறப்படுகிறது.

Similar News

News January 25, 2026

தஞ்சை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

நேரடி கொள்முதல் நிலையத்தில் விவசாயிகள் அல்லாத நபர்கள் போலி ஆவணங்கள் தயார் செய்து நேரடி கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்வதாக புகார் எழுந்துள்ளது. இதுபோன்ற நடவடிக்கை மேற்கொள்ளும் வியாபாரிகள், நெல் கொள்முதல் பணியாளர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார். முறைகேட்டில் ஈடுபட்டால் கட்டணமில்லா எண்ணிற்கு 8005993540 புகார் அளிக்கலாமெனவும் கூறியுள்ளார்.

News January 25, 2026

தஞ்சை மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை!

image

தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்று (ஜன.25) கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் மேல் கிழக்கு திசை வளிமண்டல அலை நிலவுவதால் தஞ்சாவூர், கடலூர், ராமநாதபுரம், சேலம், நாமக்கல் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE பண்ணுங்க!

News January 25, 2026

தஞ்சை மாவட்டத்தில் மின்தடை அறிவிப்பு!

image

தஞ்சை மாவட்டத்தில் உள்ள ஒரத்தநாடு, சாக்கோட்டை, மணிமண்டபம் ஆகிய துணை மின் நிலையங்களில் வருகிற 27ம் தேதி பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. இதன் காரணமாக இங்கிருந்து மின் விநியோகம் பெரும் ஒரத்தநாடு, சாக்கோட்டை, நாச்சியார்கோவில், மணிமண்டபம், அருளானந்த நகர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் அன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE பண்ணுங்க!

error: Content is protected !!