News May 4, 2024
IPL: குஜராத் அணி தடுமாற்றம்

ஆர்சிபிக்கு எதிரான போட்டியில் குஜராத் அணி ரன் குவிக்க முடியாமல் திணறி வருகிறது. பெங்களூருவில் நடைபெறும் இப்போட்டியில் விருத்திமான் சாஹா ஒரு ரன்னிலும், சுப்மன் கில் 2 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். அவர்கள் 2 பேரின் விக்கெட்டுகளையும் முகம்மது சிராஜ் சாய்த்தார். இதையடுத்து சாய் சுதர்சனை 6 ரன்னில் க்ரீன் அவுட்டாக்கினார். சற்று முன்பு வரை குஜராத் 3 விக்கெட் இழப்புக்கு 28 ரன் எடுத்திருந்தது.
Similar News
News March 18, 2026
திருமணம் செய்யாமல் உறவு.. தமிழ் நடிகை விருப்பம்

திருமணம் செய்துகொள்ளாமல் உறவில் இருப்பதே நல்லது எனவும் அதையே தான் விரும்புவதாகவும் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி தெரிவித்துள்ளார். வாழ்க்கைத் துணை வேண்டும் என்பது உண்மை தான்; ஆனால், சேர்ந்து வாழும்போது இருவருக்குமே நிம்மதி இல்லாத ஒரு நிலை வரக்கூடாது. அண்மைக் காலமாக திரையுலகில் பலரும் விவாகரத்து பெற்று வரும் நிலையில், ஐஸ்வர்யாவின் இந்த கருத்து SM-ல் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. உங்கள் கருத்து என்ன?
News March 18, 2026
FLASH: விசிக தொகுதிப் பங்கீடு இன்று இறுதியாகிறது!

<<19413921>>திமுகவில் 6 கட்சிகளுக்கு<<>> தொகுதிப் பங்கீடு இறுதியான நிலையில், இன்று மாலை ஸ்டாலினை திருமாவளவன் நேரில் சந்தித்து பேசுகிறார். அப்போது தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த முறை 6 தொகுதிகளில் போட்டியிட்ட விசிக 4-ல் வென்றது. இம்முறை கூடுதல் தொகுதிகள் வேண்டும் என திருமாவளவன் நெருக்கடி கொடுத்து வருகிறார். அதனால் தான் தொகுதிப் பங்கீட்டில் இழுபறி நீடித்து வந்தது.
News March 18, 2026
அனைத்து ரேஷன் கார்டுக்கும்.. புதிய அறிவிப்பு

டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ், ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஒரு பெரிய வசதியை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது. பல்வேறு சேவைகளை ஒரே இடத்தில் வழங்கும் UMANG App-ல், இப்போது ‘மேரா ரேஷன்’ என்ற அம்சத்தை மத்திய அரசு சேர்த்துள்ளது. இதன் மூலம் ரேஷன் அட்டை தொடர்பான எந்தவொரு பணிக்காகவும் அரசு அலுவலகங்களுக்கோ, ரேஷன் கடைகளுக்கோ செல்வதற்கு பதிலாக, உமாங் செயலி மூலம் உங்கள் மொபைல் போனிலேயே ரேஷன் சேவைகளை பெறலாம்.


