News January 11, 2026
கிருஷ்ணகிரி: சாலை விபத்தில் இளம்பெண் பலி!

கிருஷ்ணகிரி அருகே சேலம் தேசிய நெடுஞ்சாலையில் 35 வயது பெண் ஒருவர் ஜன.9 ஆம் தேதி மாலை நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியது. இதில் பெண் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தார். அவரை மீட்ட போலீசார் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நேற்று அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தாலுகா போலீசார் இறந்தவர் யார்? என்பது குறித்து விசாரிக்கின்றனர்.
Similar News
News January 29, 2026
கிருஷ்ணகிரி: துப்புரவு பணியாளர் மர்ம மரணம்!

ஓசூர் மூக்கண்டப்பள்ளியை சேர்ந்த துப்புரவு பணியாளர் சரோஜா (60). வீட்டிலிருந்து வெளியே சென்றவர் வெகு நேரம் ஆகியும் திரும்பாததால் குடும்பத்தினர் தேடினர். அப்போது அப்பகுதியில் உள்ள தனியார் நிறுவனம் அருகே மர்மமான முறையில் இறந்து கிடந்தார். தகவல் அறிந்த சிப்காட் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து விசாரித்து வருகின்றனர்.
News January 29, 2026
கிருஷ்ணகிரி: கொடூர கணவனால் ஆசிட் குடித்த மனைவி!

சின்ன பர்கூரைச் சேர்ந்த கோகிலா (42) குடும்ப தகராறு காரணமாக கடந்த ஜனவரி 23-ஆம் தேதி ஆசிட் குடித்து தற்கொலைக்கு முயன்றார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி கடந்த 24-ஆம் தேதி உயிரிழந்தார். இது குறித்து விசாரித்த போலீசார் கோகிலாவை தாக்கி தற்கொலைக்கு தூண்டிய அவரது கணவர் பலராமன் மற்றும் நாத்தனார் மகேஸ்வரி ஆகிய இருவரையும் நேற்று (ஜன.28) கைது செய்தனர்.
News January 29, 2026
கிருஷ்ணகிரி: வாழை தோட்டத்தை நாசம் செய்த ஒற்றை யானை

வேப்பனப்பள்ளி அடுத்த தமாண்டரப்பள்ளி வனப்பகுதியில் முகாமிட்டிருந்த ஒற்றை காட்டு யானை இன்று காலை ஜன-28 வனப்பகுதியை விட்டு வெளியேறி தமாண்டரபள்ளி கிராமத்தில் உள்ள ராஜப்பா என்பவருடைய தோட்டத்தில் புகுந்து வாழை தோட்டத்தை நாசப்படுத்தியது. அப்போது அங்கு சென்ற ராஜப்பா யானை கண்டு அதிர்ச்சியடைந்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். விரைந்து வந்த வனத்துறையினர் யானையை வனப்பகுதிக்கு விரட்டி அடித்தனர்.


