News January 11, 2026
மனைவி பிரிந்த சோகம்: கரூரில் வாலிபர் விபரீத முடிவு!

வேலாயுதபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கௌதம் (26). இவருக்கும் இவருடைய மனைவிக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, கடந்த மூன்று ஆண்டுகளாக மனைவியைப் பிரிந்து கௌதம் தனியாக வசித்து வந்துள்ளார். இதனால் மிகுந்த மன உளைச்சலில் இருந்த அவர்,வீட்டிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த வேலாயுதபாளையம் போலீசார் பிரேதத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Similar News
News February 1, 2026
கரூர்: ரயில்வேயில் 22,195 பேருக்கு வேலை! APPLY NOW

கரூர் மக்களே, ரயில்வே துறையில் காலியாக உள்ள 22,195 பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளன. 18 – 33 வயதுகுட்பட்ட 10-வது தேர்ச்சி பெற்றவர்கள் மார்ச் 3-ம் தேதிக்குள் <
News February 1, 2026
கிருஷ்ணராயபுரம் அருகே விபத்து

கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் முருகானந்தம் என்பவர் பணிபுரிந்து வருகிறார். நேற்று இவர் சாலையில் தனது பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது அதே வழியில் பிரித்திவிராஜ் என்பவர் ஓட்டி வந்த பைக் மோதியது. இதில் படுகாயம் அடைந்து, மேல் சிகிச்சைக்காக கரூர் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
News February 1, 2026
கரூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ரோந்து பணி தீவிரம்

கரூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஜோஸ் தங்கையா உத்தரவின்படி, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய இன்று இரவு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் போலீஸ் ரோந்துப் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. உங்கள் பகுதியில் குற்றச் செயல்கள் அல்லது சந்தேகத்திற்கிடமான நடமாட்டங்கள் இருந்தால், உடனடியாகச் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்திற்கோ அல்லது அவசர உதவி எண்களுக்கோ அழைக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.


