News January 11, 2026
‘ஜனநாயகன்’ to ‘டாக்ஸிக்’ வரை.. யார் இந்த KVN?

‘ஜனநாயகன்’, ‘டாக்ஸிக்’, மஞ்சுமல் பாய்ஸ் இயக்குநரின் அடுத்த படம் என பல முக்கிய பிரமாண்ட படங்களை KVN நிறுவனம் தயாரித்து வருகிறது. இதன் நிறுவனர் பெங்களூருவை சேர்ந்த வெங்கட் கே.நாராயணன், பிரபல ரியல் எஸ்டேட் நிறுவனமான பிரெஸ்டீஜ் குழுமத்தில் 20 ஆண்டுகளுக்கும் மேல் பணியாற்றியவர். ஆரம்பத்தில் கர்நாடகாவில் திரைப்பட விநியோகஸ்தராக தொடங்கிய இவரது பயணம் பிரமாண்ட படங்களை தயாரிக்கும் அளவிற்கு வளர்ந்துள்ளது.
Similar News
News February 5, 2026
பெரம்பலூர்: காவல் அலுவலகத்தில் சிறப்பு மனு முகாம்

பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அனிதா தலைமையில், நேற்று மாவட்ட காவல் அலுவலகத்தில் சிறப்பு மனு முகாம் நடைபெற்றது. இந்த சிறப்பு மனு முகாமில் கலந்து கொண்ட காவல் கண்காணிப்பாளர், பொதுமக்களிடம் நேரடியாக மனுவை பெற்றுக் கொண்டார். இம்முகாமில் பொதுமக்களிடமிருந்து 33 மனுக்கள் பெறப்பட்டு, சம்பந்தப்பட்ட காவல் நிலையத்திற்கு நடவடிக்கை மேற்கொள்ள அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
News February 5, 2026
ஏன் மூன்று முறை ஆரத்தி காட்டுகிறோம் என தெரியுமா?

பொதுவாக கடவுளை வழிபடும் போது, 3 முறை கற்பூர ஆரத்தி காட்டுவோம். அது, கடவுளின் 3 நிலைகளை குறிக்கிறது. அதாவது, படைத்தல், காத்தல், அழித்தல் ஆகியவற்றைக் குறிக்கிறது. அதே நேரத்தில் இதற்கு வெவ்வேறு அர்த்தங்களும் உண்டு. முப்பெரும் தெய்வங்களான பிரம்மா, விஷ்ணு, சிவன் அல்லது 3 காலங்களான இறந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் போன்றவற்றையும் குறிக்கிறது எனவும் கூறப்படுகிறது. SHARE IT.
News February 5, 2026
அதிமுகவில் புதிய கட்சி.. செந்தில் பாலாஜிக்கு அதிர்ச்சி

கொங்கு மக்கள் முன்னணி(கொமமு) தலைமை ஒருங்கிணைப்பாளர் C.ஆறுமுகம், EPS-ஐ நேரில் சந்தித்து அதிமுக கூட்டணியில் இணைந்தார். வரும் சட்டமன்றத் தேர்தலில் கொங்கு மக்கள் முன்னணி, அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் வெற்றிக்காக பாடுபடும் எனவும் ஆறுமுகம் தெரிவித்துள்ளார். கொமமுவுடன் செந்தில் பாலாஜி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்பட்ட நிலையில், அக்கட்சி திடீரென அதிமுக கூட்டணியில் இணைந்துள்ளது.


