News May 4, 2024
இரவு 10 மணி வரை மழை பெய்யக் கூடும்

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை இடி, மின்னலுடன் மழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தி.மலை, தருமபுரி, சேலத்தில் இடி, மின்னலுடன் மிதமான மழையும், நீலகிரி, கரூர், ஈரோடு, திண்டுக்கல், தேனியில் இடி, மின்னலுடன் லேசான மழை பெய்யக் கூடும் எனக் கூறியுள்ள வானிலை மையம், மழை காரணமாக சில இடங்களில் தண்ணீர் தேங்கும், போக்குவரத்து நெரிசல் ஏற்படக் கூடும் என எச்சரித்துள்ளது.
Similar News
News January 13, 2026
ஒரே கதை.. ஒரே ஹீரோயின்.. 3 படங்கள்!

தெலுங்கில் ‘துளசி’(2007) படம் பெரிய ஹிட்டடித்தது. அதை ‘விஸ்வாசம்’(2019) என மாற்றி எடுக்க, மெகா ஹிட். இதை இன்னும் பட்டி டிங்கரிங் பார்த்து மீண்டும் தெலுங்கில் ‘மன சங்கர வரபிரசாத் காரு’(2026) என ரிலீஸ் செய்ய, மீண்டும் ஹிட். இதில் முக்கிய பாய்ண்ட், 3 படத்திலும் நயன்தாராதான் ஹீரோயின். அதைவிட பெரிய டிவிஸ்ட், ‘துளசி’ ஹீரோ வெங்கடேஷ், ‘மன சங்கர வரபிரசாத் காரு’ படத்தில் கேமியோ ரோலில் நடித்துள்ளார்.
News January 13, 2026
நான் வெறும் பவுலர் மட்டும் அல்ல: ஹர்சித் ராணா

NZ-க்கு எதிரான முதல் ODI வெற்றியில் ஹர்ஷித் ராணா (29 ரன்கள் + 2 விக்கெட்கள்) முக்கிய பங்கு வகித்தார். இந்நிலையில், அணி நிர்வாகம் தன்னை ஒரு ஆல்ரவுண்டராக வளர்க்க விரும்புவதாக அவர் தெரிவித்துள்ளார். அதனால் வலை பயிற்சியின் போது பேட்டிங்கிலும் அதிக கவனம் செலுத்துகிறேன் எனவும், பேட்டிங்கில் 8-வது விக்கெட்டில் இறங்கி தன்னால் 30-40 ரன்களை குவிக்க முடியும் என நம்புவதாகவும் அவர் கூறியுள்ளார்.
News January 13, 2026
செங்கோட்டையனுடன் இணையும் அடுத்த தலைவர்

அமித்ஷா உடனான சந்திப்புக்கு பிறகு ஓபிஎஸ், சசிகலாவுக்கு அதிமுகவில் மீண்டும் இடமில்லை என EPS திட்டவட்டமாக கூறியிருந்தார். இதனால் மீண்டும் தவெகவா, திமுகவா என கன்ஃபியூஷனில் இருந்த OPS-ஐ, செங்கோட்டையன் காண்டாக்ட் செய்ததாக தகவல் கசிந்துள்ளது. தவெகவுக்கு வந்தால் தெற்கு மண்டல பொறுப்பாளர் பதவி கிடைக்கும் என KAS டீல் பேச, OPS-ம் தை 1-ம் தேதி பதில் சொல்கிறேன் என சொல்லியிருப்பதாக கூறப்படுகிறது.


