News January 11, 2026

ராணிப்பேட்டை: காவல்துறை இரவு ரோந்து பணி விரவம்

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று (ஜன-10) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

Similar News

News February 7, 2026

ராணிப்பேட்டை: போஸ்ட் ஆபீஸில் 2019 காலியிடங்கள்! APPLY NOW

image

ராணிப்பேட்டை மாவட்ட மக்களே.., தமிழ்நாடு அஞ்சல் துறையில் காலியாக உள்ள 2019 காலியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு 10ஆவது படித்திருந்தாலே போதுமானது. மாதம் ரூ.29,380 வரை சம்பளம் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க பிப்.16ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் <>இங்கே கிளிக்<<>> பண்ணுங்க. இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News February 7, 2026

ராணிப்பேட்டை: பயிற்சியை ஆய்வு செய்த கண்காணிப்பாளர்

image

இராணிப்பேட்டை மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் வாராந்திர உடற்பயிற்சி நடைபெற்றது. இந்த பயிற்சியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அய்மன் ஜமால், பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் உடன் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் குணசேகரன் (CWC), துணை காவல் கண்காணிப்பாளர் குமார் (DCRB), காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்கள் கலந்து கொண்டனர்.

News February 7, 2026

ராணிப்பேட்டை: மூதாட்டி பரிதாப பலி!

image

ஆற்காடு நக்கீரன் தெருவைச் சேர்ந்த தரணி பாய் (78) என்ற மூதாட்டி, வியாழக்கிழமை அண்ணா சிலை அருகே சாலையைக் கடந்தபோது அதிவேகமாக வந்த சரக்கு வாகனம் அவர் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவர், ஆற்காடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து ஆற்காடு நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்திய வாகனம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!