News January 11, 2026
கடலூர் மாவட்ட SP எச்சரிக்கை

கடலூர் மாவட்டத்தில், போக்குவரத்து விதிகளை மீறி சிறுவர் மற்றும் சிறுமியரை இருசக்கர வாகனங்கள் ஓட்ட அனுமதிக்கும் பெற்றோர்கள் மீதும், வழக்கு பதிவு செய்து வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். மேலும், இதுபோன்ற செயலில் ஈடுபடும் பெற்றோர், உறவினர்களுக்கு 25 ஆயிரம் அபராதமும் வழக்கு பதிவு செய்யப்படும் என்று எஸ்.பி ஜெயக்குமார் (ஜன.10) எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Similar News
News January 23, 2026
கடலூர்: 9 நடமாடும் வாகனங்கள் – ஆட்சியர் அறிவிப்பு!

கடலூர் மாவட்டத்தில் அனைத்து வாக்குச்சாவடி பகுதிகள், தொகுதிகளைச் சென்றடையும் வகையில் விழிப்புணர்வு நோக்கத்திற்காக வாக்குப்பதிவு எந்திரங்கள் குறித்து 9 நடமாடும் செயல் விளக்க வாகனங்கள் பயன்படுத்தப்பட உள்ளது. இந்த செயல்முறை விளக்கம் குறித்த விழிப்புணர்வு, இந்திய தேர்தல் ஆணையத்தால் தேர்தல் நாள் அறிவிக்கும் வரையில் தொடர்ந்து நடத்தப்படும் என கடலூர் ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.
News January 23, 2026
கடலூர்: தேர்வு கிடையாது-போஸ்ட் ஆபீஸில் வேலை!

கடலூர் மக்களே, இந்திய அஞ்சல் துறையில் போஸ்ட் மாஸ்டர், உதவி போஸ்ட் மாஸ்டர், தபால் சேவகர் உள்ளிட்ட 30,000 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு தேர்வு இல்லை. 10-ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். உள்ளூர் மொழி மற்றும் சைக்கிள் ஓட்டத் தெரிந்திருப்பது கட்டாயமாகும். விருப்பமுள்ளவர்கள் <
News January 23, 2026
டிராக்டர் மீது ஆட்டோ மோதி விபத்து – பெண் பலி

சென்னை, வெட்டுவாங்கேணியை சேர்ந்தவர் சௌந்தர்ராஜன்(27). இவர் தனது மனைவி பவித்ரா(23) மற்றும் மகனுடன் நேற்று சேத்தியாதோப்பு அருகே ஆட்டோவில் சென்ற போது, முன்னாள் சென்ற டிராக்டர் மீது ஆட்டோ மோதி விபத்துக்குள்ளானது. இதில், பவித்ரா சம்பவயிடத்திலே உயிரிழந்தார். காயம் அடைந்த சௌந்தர்ராஜன், மகன் சிவமித்திரன் ஆகியோர் மருத்துவமனை சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.


