News January 10, 2026
பூமியில் தங்கம் உருவானது எப்படி?

தங்கம் உண்மையில் பூமியில் உருவானது அல்ல. விண்வெளியில் உள்ள பெரிய நட்சத்திரங்கள் வெடிக்கும்போது அதிலிருந்து தங்கம் சிதறியிருக்கின்றன. அந்த தங்க கட்டிகள் விண்கற்கள் மூலமாக பூமியில் வந்து விழுந்ததாக ஆராய்ச்சிகள் கூறுகின்றன. பிறகு, பூமியின் தட்டுகள் நகர்வதாலும், எரிமலை வெடிப்பு போன்ற சம்பவங்கள் நிகழ்வதாலும் பூமியில் புதைந்துள்ள தங்கம் வெளியே வருகிறது. 99% பேருக்கு தெரியாத இந்த விஷயத்தை ஷேர் பண்ணுங்க!
Similar News
News February 4, 2026
சர்க்கரைவள்ளிக் கிழங்கின் நன்மைகள்

சர்க்கரைவள்ளிக் கிழங்கு பல்வேறு ஊட்டச்சத்துகள் நிறைந்தது. இதில், நார்ச்சத்து, வைட்டமின் A உள்ளிட்டவை நிறைந்துள்ளன. சர்க்கரைவள்ளிக் கிழங்கை, வேகவைத்து சாப்பிடுவது சிறந்தது. இதனால், உடலுக்கு என்னென்ன ஆரோக்கியம் ஏற்படும் என்று, மேலே பகிர்ந்துள்ள போட்டோக்களில் கொடுத்திருக்கிறோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. உங்களுக்கு கிழங்கு பிடிக்குமா? கமெண்ட்ல சொல்லுங்க.
News February 4, 2026
தங்கம், வெள்ளி விலை.. ஒரே நாளில் அதிரடியாக மாறியது

கடந்த 5 நாள்களில் மட்டும் 1 கிலோவுக்கு <<19037518>>₹1.45 லட்சம்<<>> வரை குறைந்து இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்திய வெள்ளி விலை, <<19039582>>நேற்று<<>> மீண்டும் கிலோவுக்கு ₹20,000 உயர்ந்தது. இதனால் வெள்ளி 1 கிராம் ₹300-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், இன்று சர்வதேச சந்தையில் தங்கம், வெள்ளி விலை உயர்ந்துள்ளதால் இந்திய சந்தையிலும் மீண்டும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தங்கம் விலையும் நேற்று அதிகரிக்க தொடங்கியது.
News February 4, 2026
தென் மண்டலத்தில் கனிமொழி நடத்தும் ஸ்பெஷல் சர்வே

திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரியை உள்ளடக்கிய தென்மண்டலத்தின் திமுக தேர்தல் பொறுப்பாளராக கனிமொழி உள்ளார். இந்த மாவட்டங்களில் யாரை நிறுத்தினால் சிரமப்படாமல் ஜெயிக்க முடியும் என்பது குறித்து தனிப்பட்ட முறையில் சர்வே டீமை களத்தில் இறக்கி இருக்கிறாராம் கனிமொழி. தென்மாவட்டங்களிலுள்ள 22 தொகுதிகளிலும் பல கோணங்களில் சர்வே நடப்பதால் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலக்கத்தில் உள்ளனராம்.


