News January 10, 2026
அயோத்தியில் அசைவ உணவு டெலிவரி செய்ய தடை

அயோத்தி ராமர் கோயிலை சுற்றியுள்ள 15 கிமீ-க்கு அசைவ உணவுகளை டெலிவரி செய்யத் தடை விதிக்கப்பட்டுள்ளது. உணவகங்களில் அசைவத்திற்கு ஏற்கெனவே தடை அமலில் உள்ள நிலையில், தற்போது ஆன்லைன் டெலிவரிக்கும் தடை விதித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இதை மீறி அசைவ உணவுகளை டெலிவரி செய்தால், சம்பந்தப்பட்ட ஆன்லைன் தளங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
Similar News
News February 2, 2026
SC விதிக்கு புறம்பாக தமிழக அரசு குழு அமைப்பு: R.N.ரவி

பல்கலை., துணைவேந்தர்களை நியமிக்க TN அரசு அமைத்துள்ள தேடுதல் குழு SC விதிக்கு புறம்பானது என R.N.ரவி குற்றஞ்சாட்டியுள்ளார். UGC பிரதிநிதியை தேடுதல் குழுவில் கட்டாயம் இணைக்க வேண்டும் என்றும் UGC பிரதிநிதி இல்லாத, தேர்வுக் குழு பரிந்துரைக்கும் எந்தவொரு துணைவேந்தர் நியமனமும் செல்லாது எனவும் கூறிய அவர், UGC பிரதிநிதியை இணைக்கும் வரை தேடுதல் குழுவின் நடவடிக்கையை நிறுத்தி வைக்கவும் வலியுறுத்தினார்.
News February 2, 2026
முடி காடு மாதிரி வளர மூலிகை எண்ணெய்.. Try This

➤உரலில் சடாமாஞ்சில் வேர், வெந்தயம் மற்றும் கறிவேப்பிலையை இடித்து கொள்ளவும் ➤கடாயில் தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய் விட்டு, அரைத்த பொடியை போட்டு, கரிசலாங்கண்ணி தூளை சேர்க்கவும் ➤20 நிமிடங்கள் சூடுபடுத்தி, எண்ணெய்யை வடிகட்டி கண்ணாடி பாட்டிலில் ஊற்றுங்கள் ➤வாரத்திற்கு 2 முறை முடியின் வேர்க்கால்களில் தேய்த்து, மசாஜ் செய்துவர முடி உதிர்வு குறையும். பலருக்கும் பயனளிக்கும் SHARE THIS.
News February 2, 2026
H.ராஜாவை நேரில் சந்தித்து நலம் விசாரித்த நடிகர் ரஜினி

H.ராஜா உடல்நலக்குறைவால் கடந்த 2 நாள்களாக சென்னை அப்போலோவில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், அப்போலோவுக்கு விரைந்த ரஜினி, H.ராஜாவை நேரில் சந்தித்து உடல்நலம் குறித்து கேட்டறிந்தார். இதன்பின், H.ராஜா விரைவில் குணமடைந்து வீடு திரும்புவார் என்று குடும்பத்தினருக்கு நம்பிக்கையாக ஆறுதல் கூறினார். ஏற்கெனவே, CM ஸ்டாலின் உள்ளிட்டோர் H.ராஜாவை நேரில் நலம் விசாரித்தது குறிப்பிடத்தக்கது.


