News January 10, 2026

ஜன.1-ம் தேதியை கணக்கிட்டு பணம்: தமிழக அரசு அறிவிப்பு

image

அரசு ஊழியர்களுக்கான உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம் (TAPS) ஜன.1 முதல் அமலுக்கு வருவதாக TN அரசு அறிவித்துள்ளது. மாநில அரசு அலுவலர்கள் பெற்ற கடைசி மாதம் ஊதியத்தில் 50% தொகை TAPS-ஆக வழங்கப்படும். இவ்வாறு 50% TAPS வழங்குவதற்கு அரசு ஊழியர்கள் 10% பங்களிப்பு வழங்க வேண்டும்; மீதமுள்ள 40% நிதியை அரசே ஏற்கும்.

Similar News

News February 14, 2026

திமுக தோற்ற 40 தொகுதிகளை கேட்கும் மாணிக்கம் தாகூர்!

image

ஆட்சியில் பங்கு எங்கள் உரிமை; அதிகார பகிர்வு அவசியம் என காங்கிரஸ் MP மாணிக்கம் தாகூர் திட்டவட்டமாக கூறியுள்ளார். மதுரையில் நேற்று பேசிய அ<<19136927>>மைச்சர் ராஜகண்ணப்பனுக்கு<<>> பதிலடி கொடுக்கும் வகையில், 2021 தேர்தலில் 173 தொகுதியில் போட்டியிட்டு திமுக தோல்வியடைந்த 40 தொகுதிகளை தான் நாங்கள் கேட்கிறோம் என சூசகமாக பதிவிட்டுள்ளார். இது கூட்டணியில் மீண்டும் புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது. உங்கள் கருத்து என்ன?

News February 14, 2026

காதலர் தினத்தில் கொடூரம்.. காதலியை கொலை செய்து..

image

போபாலில் செப்டிக் டேங்க்கில் இருந்து அழுகிய நிலையில் இளம்பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. விசாரித்ததில், அப்பெண் திருமணமான ஒருவருடன் சேர்ந்து வாழ்ந்தது தெரியவந்தது. அத்துடன், இந்த விவகாரம் அவரது மனைவிக்கு தெரியவர, இரு பெண்களுக்கிடையே சண்டை வெடித்துள்ளது. பின்னர், இச்சிக்கலை தீர்க்க காதலியை, தனது உறவினர்களுடன் சேர்ந்து காதலர் தினத்தையொட்டி காதலன் கொலை செய்துள்ளான் என்பதே கொடூரத்தின் உச்சம்.

News February 14, 2026

மார்ச் 8.. திமுக தேதி குறித்தது ஏன்?

image

காங்கிரஸின் கடும் அழுத்தத்துக்கு மத்தியில் பிப்.22 முதல் திமுக கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்கவுள்ளது. கடந்த முறையை விட 2 – 3 தொகுதிகள் வேண்டுமானால் அதிகமாக கொடுக்க திமுக முன்வரும் என கூறப்படுகிறது. தொகுதி உடன்பாட்டை சுமுகமாக முடித்தபின், மார்ச் 8-ல் திருச்சியில் நடக்கவுள்ள திமுக மாநாட்டில் கூட்டணி தலைவர்கள் அனைவரும் மேடையேறவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

error: Content is protected !!