News January 10, 2026

ஊரக பணியாளர்களை அலைக்கழிக்காதீர்: அன்புமணி

image

ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் உள்ளிட்ட 14 கோரிக்கைகளை முன்வைத்து போராடும் ஊரக & நகர்ப்புற வாழ்வாதார இயக்கப் பணியாளர்களுக்கு அன்புமணி ஆதரவு தெரிவித்துள்ளார். தனது X-ல் அவர், ஆண்டுதோறும் பணியை புதுப்பிக்கும் நடைமுறையை அரசு கைவிட்டு, ஊதியத்தை ₹25,000- ₹60,000 வரை நிர்ணயிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். மேலும், அவர்களை அலைக்கழிக்காமல் உடனடியாக அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமென அவர் கூறியுள்ளார்.

Similar News

News February 6, 2026

தவெகவின் இணையதளம் முடங்கியது!

image

தேர்தல் அறிக்கையில் மக்களின் பரிந்துரைகளை பதிவு செய்வதற்காக தவெக வெளியிட்ட இணையதளம் அடுத்த சில மணி நேரங்களிலேயே முடங்கியது. ஒரே நேரத்தில் அதிகப்படியானோர் இணையதளத்தை அணுகியதால் ஸ்தம்பித்ததாக தவெக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பொதுமக்கள் தங்கள் பரிந்துரைகளை மின்னஞ்சல் வாயிலாகவும் தெரிவிக்கும் வகையில் tvkmanifesto2026@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை வெளியிட்டுள்ளது.

News February 6, 2026

ராசி பலன்கள் (06.02.2026)

image

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.

News February 6, 2026

பறவை காய்ச்சல்.. இதெல்லாம் பண்ணாதீங்க!

image

தமிழகத்தில் <<19056428>>பறவைக் காய்ச்சல்<<>> பரவி வருவதன் எதிரொலியாக, அனைத்து மாவட்டங்களுக்கும் பொது சுகாதாரத்துறை முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. அதில், காய்ச்சல், இருமல், தொண்டை வலி ஆகியவை பறவைக் காய்ச்சலின் அறிகுறிகள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. சரிவர சமைக்கப்படாத முட்டை, இறைச்சிகளை தவிர்க்குமாறும், பறவை காய்ச்சல் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் எனவும் மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

error: Content is protected !!