News January 10, 2026

பெரம்பலூர்: வாட்ஸ்அப் வழியாக புக்கிங்!

image

பெரம்பலூர் மக்களே இனி கேஸ் சிலிண்டர் புக் செய்ய சிரமப்பட வேண்டாம். அதனை வாட்ஸ்அப் மூலமே எளிதாக புக் செய்யலாம். அதற்கு இண்டேன் (Indane): 7588888824, பாரத் (Bharat Gas): 1800224344, ஹெச்பி (HP Gas): 9222201122. மேற்கண்ட உங்கள் கேஸ் நிறுவனத்தின் எண்ணை போனில் SAVE செய்துவிட்டு, வாட்ஸ்அப்பில் ‘HI’ என மெசேஜ் செய்தால் போதும், உங்கள் வீடு தேடி கேஸ் சிலிண்டர் வந்தடையும். இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க!

Similar News

News January 27, 2026

பெரம்பலூர் ஆட்சியருக்கு ஆளுநர் ரவி பாராட்டு

image

முன்னாள் படை வீரர்களின் நலனை காத்திடும் வகையில், கொடிநாள் நிதி திரட்டுவதில் பெரம்பலூர் மாவட்டம் மாநிலத்தில் 3-ஆம் இடம் பிடித்தது. இதனை தொடர்ந்து சென்னை ராஜ்பவனில் நேற்று (26.1.2026) நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, அரசு தலைமை செயலாளர் முருகானந்தம் முன்னிலையில், பெரம்பலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் மிருணாளினிக்கு கேடயம் வழங்கிப் பாராட்டினார்.

News January 27, 2026

பெரம்பலூர்: செல்போன் பயனாளிகளே உஷார்!

image

உங்கள் போனுக்கு வரும் அழைப்புகள் மற்றும் OTP எண்களைத் திருட சைபர் குற்றவாளிகள் ‘கால் பார்வேர்டிங்’ முறையைப் பயன்படுத்தலாம். இதைச் சரிபார்க்க உங்கள் மொபைலில் *#21# என்று டயல் செய்யுங்கள். அங்கு வேறு எண்களுக்கு ‘Forward’ ஆகிறதா என்பதை அறியலாம். அப்படித் தகவல்கள் கசிந்தால், உடனடியாக ##002# என டயல் செய்து அனைத்துப் பார்வேர்டிங் வசதிகளையும் ரத்து செய்யலாம். இதனை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

News January 27, 2026

பெரம்பலூரில் என்கவுண்டர்! மேலும் 6 பேர் கைது

image

திருமாந்துறை அருகே பிரபல ரவுடி வெள்ளை காளி மீது வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்திய ரவுடி கொட்டு ராஜா எனப்படும் அழகுராஜ் என்பவரை போலீசார் கைது செய்து, அவர் மறைத்து வைத்திருந்த ஆயுதத்தை கைப்பற்றுவதற்காக அழைத்துச் சென்றனர். அப்போது தப்பி ஓட முயன்றதால், கொட்டு ராஜா போலீசாரால் என்கவுண்டரில் சுட்டு கொல்லப்பட்டார். இந்நிலையில், வெள்ளை காளியை கொல்ல முயன்ற சம்பவத்தில் மேலும் 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

error: Content is protected !!