News January 10, 2026

ஜோதிமணி, மாணிக்கம் தாகூருக்கு SP விடுத்த வார்னிங்!

image

திமுக, காங்கிரஸ் கூட்டணி தொடர்பாக கருத்து கூறி வரும் ஜோதிமணி, மாணிக்கம் தாகூருக்கு செல்வப்பெருந்தகை(SP) வார்னிங் கொடுத்துள்ளார். தலைமையின் அறிவுறுத்தலை மீறி இருவரும் பொதுவெளியில் கருத்து கூறுவது கூட்டணி பேச்சுவார்த்தையை சீர்குலைக்கும் செயல் என அவர் கண்டனம் தெரிவித்துள்ளார். தேர்தலில் சீட்டு, ஆட்சியில் பங்கு தொடர்பாக <<18809448>>காங்கிரஸ் தலைவர்கள்<<>> அடுத்தடுத்து கூறி வரும் கருத்து சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Similar News

News January 28, 2026

தி.மலையில் தடையை மீறி சர்ச்சையில் சிக்கிய அர்ச்சனா!

image

2024 பிக்பாஸ் தமிழ் டைட்டில் வின்னர் அர்ச்சனா தேவையற்ற சர்ச்சையில் சிக்கியுள்ளார். திருவண்ணாமலை கோயில் மலையில் ஏற தடை உள்ள நிலையில், அவர் சில தினங்களுக்கு முன் இந்த மலை மலை உச்சிக்கு சென்றுள்ளார். இது தொடர்பாக அர்ச்சனா இன்ஸ்டாவில் பதிவிட, அது சர்ச்சையாகி இருக்கிறது. அந்த போஸ்ட்டை தற்போது இன்ஸ்டாவில் இருந்து டெலிட் செய்துவிட்டாலும், அர்ச்சனா மீது வனத்துறை நடவடிக்கை எடுக்கலாம் என கூறப்படுகிறது.

News January 28, 2026

விஜய் போட்டியிடும் தொகுதி இதுவா?

image

தேர்தலுக்கு இன்னும் 2 மாதங்களே உள்ளதால் எந்த தொகுதியில் களமிறங்குவது என்பது குறித்து விஜய் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளாராம். முதற்கட்டமாக காமராஜர் போட்டியிட்ட விருதுநகர், நாகர்கோவில் ஆகிய 2 தொகுதிகள் லிஸ்டில் வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதில் விருதுநகரை தேர்வு செய்ய விஜய் விருப்பம் காட்டுவதாக பேசப்படுகிறது. விஜய் எந்த தொகுதியில் போட்டியிடலாம்?

News January 28, 2026

திருமணத்திற்கு முன்பே பிறந்த தமிழ் நடிகை

image

கமல்ஹாசன் 1988-ல் சரிகாவை திருமணம் செய்தபோது, அவர்களுக்கு பிறந்த ஸ்ருதிஹாசனுக்கு வயது 2. உண்மைதான், ஆனால் அதற்கு முன்பே இருவரும் லிவ்-இன் உறவில் இருந்துள்ளனர். அதனால் தான், கமலின் திருமண போட்டோக்களில் ஸ்ருதியும் இருப்பார் என்று கிசுகிசுக்கப்படும். திருமணத்திற்கு பிறகு பிறந்தவர் தான் மகள் அக்‌ஷரா. பின்னர், 2004-ல் கமல் – சரிகா உறவு விவாகரத்தில் முடிந்தது.

error: Content is protected !!