News May 4, 2024
சட்டக் கல்லூரியில் சேர விண்ணப்பிக்கலாம்

தமிழகத்தில் உள்ள சட்டக் கல்லூரிகளில் சேர்வதற்கு மே 10 – 31ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் சட்டக் கல்லூரிகளில், BL, ML போன்ற சட்டப் படிப்புகள் பயிற்றுவிக்கப்படுகின்றன. இந்நிலையில், 5 ஆண்டு சட்டப் படிப்பில் சேர www.tndalu.ac.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News September 22, 2025
BREAKING: ஆவின் பொருள்கள் விலை குறைந்தது

ஜிஎஸ்டி குறைப்பு அமலுக்கு வந்ததை அடுத்து ஆவின் பொருள்களின் விலை குறைக்கப்பட்டுள்ளது. நெய், பனீர் ஆகியவற்றின் விலையை குறைத்து ஆவின் நிர்வாகம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, ஒரு கிலோ நெய் ₹40 குறைந்து ₹650-க்கு விற்கப்படும். ₹300-க்கு விற்கப்பட்ட அரை கிலோ பனீர் இனி ₹275-க்கு விற்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 200 கிராம் பனீர் விலையும் ₹110 ஆக குறைக்கப்பட்டுள்ளது.
News September 22, 2025
பெங்கால் கிரிக்கெட் சங்க தலைவரான கங்குலி!

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி இரண்டாவது முறையாக பெங்கால் கிரிக்கெட் சங்கத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இன்று நடைபெற்ற கூட்டத்தில் அவர் போட்டியின்றி தலைவர் பதவிக்கு தேர்வாகி இருக்கிறார். கங்குலி முன்பு 2015- 2019 வரை பெங்கால் கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக இருந்தார். பின்னர் 2022 வரை பிசிசிஐ தலைவராகப் பணியாற்றினார்.
News September 22, 2025
TN அரசு நிகழ்ச்சியில் பங்கேற்கும் தெலங்கானா CM

TN அரசு நடத்தும் கல்வியில் சிறந்த தமிழ்நாடு நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக தெலங்கான CM ரேவந்த் ரெட்டி பங்கேற்கவுள்ளார். நான் முதல்வன் திட்டம் உள்பட அரசின் 7 முக்கிய திட்டங்கள் தொடர்பாக, சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் செப்.25-ம் தேதி இந்நிகழ்வு நடைபெறவுள்ளது. முன்னதாக, ஆகஸ்டில் காலை உணவு திட்ட விரிவாக்க விழாவில் பஞ்சாப் CM பகவந்த் மான் பங்கேற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.