News January 10, 2026
ஈரோடு: இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்!

மக்களே மழை காலங்களில் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டாம். இனிமேல் பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் வருவார். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
Similar News
News January 18, 2026
ஈரோட்டில் CM இன்று திறந்து வைக்கிறாா்

ஈரோடு மாவட்டம் சென்னிமலை ஒன்றியம் வெள்ளோடு அருகே அமைக்கப்பட்டுள்ள காலிங்கராயரின் முழு உருவ வெண்கலச் சிலை மற்றும் அதன் கீழ் இயங்கும் நூலகத்தை, முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணியளவில் காணொலி காட்சி வாயிலாகத் திறந்து வைக்கிறார். இந்த நூலகத்தில் காலிங்கராயர் வரலாறு மற்றும் போட்டித் தேர்வுகளுக்கான புத்தகங்கள் இடம்பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
News January 18, 2026
அத்தாணி: 3-ஆம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு

ஈரோடு மாவட்டம் அத்தாணி பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி ராஜேஷின் மகன் சரண் (8). இவர் கடந்த மாதம் வீட்டின் முன்பு குளிர் காய தீ மூட்டியபோது, எதிர்பாராதவிதமாக மண்எண்ணெய் கேன் சரிந்து விழுந்து தீக்காயம் அடைந்தான். சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிறுவன், தீவிர சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்த நிலையில், இதுகுறித்து ஆப்பக்கூடல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
News January 18, 2026
ஈரோடு: 6 வயது சிறுவன் உயிரிழப்பு

ஈரோட்டை சேர்ந்த லோகநாதன், காங்கயம் நாட்டார்பாளையத்தில் தங்கித் தேங்காய் களத்தில் வேலை செய்து வருகிறார். இவரது 6 வயது மகன் அஸ்வித், கடந்த சில நாட்களாக உடல்நலமின்றி இருந்த நிலையில், திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. காங்கயம் GHக்குக் கொண்டு சென்றும், சிறுவன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து காங்கயம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


