News May 4, 2024

மாலையில் விளக்கேற்றுவதால் வரும் நன்மை

image

விளக்கில் மகாலட்சுமி வாசம் செய்வதாக சாஸ்திரங்கள் கூறுகின்றன. தினமும் மாலை 6 மணி அளவில் (சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு) வாசலில் தண்ணீர் தெளித்துக் கோலமிட வேண்டும். அதன் பின்னர், வேப்பெண்ணெய், இலுப்பை எண்ணெய், நெய் ஆகிய மூன்றையும் கலந்து தீபம் ஏற்றி, திருவிளக்கு மந்திரம் பாடி, பால் நிவேதனம் செய்து வழிபட திருமணத்தடை, சுபகாரியத்தடை, கல்வித்தடை நீங்குவதோடு சர்வ மங்கலமும் உண்டாகும் என்பது ஐதீகம்.

Similar News

News February 11, 2026

₹2,000 மகளிர் உரிமைத் தொகை.. வந்தது முக்கிய அப்டேட்

image

மகளிர் உரிமைத் தொகை உயர்த்தி வழங்கப்படும் என CM ஸ்டாலின் அறிவித்திருப்பதால், எவ்வளவு உயர்த்தப்படும் என பலரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில், ₹2,000 ஆக உயர்த்தப்படும் என்றும், மார்ச் முதல் உயர்த்தப்பட்ட மகளிர் உரிமைத் தொகையை அரசு விடுவிக்கும் எனவும் செய்திகள் பரவி வருகின்றன. ஆனால், மார்ச் முதல் மகளிர் உரிமைத் தொகை ₹2,000 வழங்குவதற்கான சாத்தியமில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

News February 11, 2026

ரமணா பட ஸ்டைலில் திமுக மாநாட்டில் பேசிய ஸ்டாலின்

image

ஒவ்வொரு பூத் நிர்வாகியும் 50 வாக்குகளை பெற்று தந்தாலே திமுகவின் வெற்றி உறுதி என மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார். திருவிடந்தையில் நடைபெற்று வரும் திமுக பூத் கமிட்டி பயிற்சி மாநாட்டில் பேசிய அவர், TN-ல் உள்ள மொத்த பூத்களின் எண்ணிக்கை 75,000. ஒவ்வொரு பூத்துக்கும் நம்முடைய குறைந்தபட்ச டார்கெட் 350 வாக்குகள். இதனை நிறைவேற்றினாலே 2.60 கோடி வாக்குகளுக்கு மேல் திமுக கூட்டணி பெற்றுவிடும் என தெரிவித்துள்ளார்.

News February 11, 2026

தாய்லாந்து பள்ளியில் துப்பாக்கிச் சூடு!

image

தாய்லாந்தின் சோங்க்லா மாகாணத்தில் உள்ள ஒரு பள்ளியில் துப்பாக்கிச் சூடு சம்பவம் நடைபெற்றுள்ளது. அடையாளம் தெரியாத நபர் ஒருவர் பள்ளி வளாகத்திற்குள் நுழைந்து மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை பிணைக்கைதிகளாக பிடித்து வைத்ததாக கூறப்படுகிறது. அந்த நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் காயமடைந்தனர். விரைந்து வந்த போலீசார் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து, சம்பந்தப்பட்ட நபரை கைது செய்துள்ளனர்.

error: Content is protected !!