News January 10, 2026

திருச்சி: 3 நாட்களுக்கு ரயில் ரத்து!

image

பொறியியல் பணிகள் காரணமாக, திருச்சி – காரைக்கால் டெமு ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது. இது குறித்து ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருச்சி – காரைக்கால் டெமு ரயிலானது வரும் 11, 14, 20 ஆகிய தேதிகளில், திருவாரூர் – காரைக்கால் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயில் திருச்சியில் இருந்து திருவாரூர் ரயில் நிலையம் வரை மட்டுமே இயக்கப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News February 16, 2026

திருச்சி: இனி WhatsApp-இல் பட்டா, சிட்டா…

image

தமிழக அரசு சொத்து தொடர்பான சேவையை WhatsApp-ல் வழங்க திட்டமிட்டுள்ளது.
1. இதற்கு, 81888 69996 என்ற எண்ணை SAVE பண்ணுங்க.
2. WhatsApp-ல் வணக்கம் அனுப்புங்க.
3. மாவட்டம், கிராமம் விவரங்களை குறிப்பிட்டு (சொத்து நகல், ஈசி, பட்டா, சிட்டா) தேர்ந்தெடுங்க.
4. நீங்கள் குறிப்பிட்ட சொத்து தொடர்பான அனைத்து தகவல்களும் WhatsApp-ல் கிடைக்கும்.
5. இந்த தகவலை SHARE பண்ணுங்க.!

News February 16, 2026

திருச்சி: டிராக்டர் மோதி கல்லூரி மாணவி பலி

image

மண்ணச்சநல்லூர் அடுத்த அய்யம்பாளையம் தரகுகாரன்கொட்டம் பகுதியைச் சேர்ந்தவர் நமீதா. இவர் திருச்சியில் உள்ள கல்லூரி ஒன்றில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். இவர் நேற்று மாலை தனது தாயாருடன் மோட்டர் சைக்கிளில் சென்ற போது, நாடார்பள்ளம் பகுதியில் டிராக்டர் மோதியது. அதில் நமீதா படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அக்கம்பக்கத்தினர் அவரது தாயாரை மீட்டு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

News February 16, 2026

திருச்சி: நாயால் பறிபோன உயிர்

image

கரூர், சேர்வைக்காரன்பட்டியைச் சேர்ந்தவர் அமிர்தம் (44). அங்கன்வாடி சமையலரான இவர் சம்பவத்தன்று டூவீலரில் சென்று கொண்டிருந்த போது கருங்குளம் என்ற இடத்தில் நாய் குறுக்கே வந்ததால் கீழே விழுந்து பலத்த காயமடைந்தார். அதனைத் தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இன்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து வையம்பட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

error: Content is protected !!