News January 10, 2026

தருமபுரியில் மழையால் மின்தடையா? உடனே CALL!

image

தருமபுரி மக்களே.. சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த நேரத்தில் மின்தடை தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட்டால் லைன்மேனைத் தேடி அலைய வேண்டாம். TNEB Customer Care எண்ணான 94987-94987-ஐ தொடர்புகொண்டு, மின் இணைப்பு எண் மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், லைன்மேன் வந்து சரிசெய்யவர். (அ) 9445850811 இந்த வாட்ஸ் ஆப் எண்ணிலும் புகார் செய்யலாம். SHARE IT!

Similar News

News February 17, 2026

தருமபுரியில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்!

image

தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு மையம் சார்பில் பெண்களுக்கான மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை (பிப்.17) காரிமங்கலம் அரசு மகளிர் கலைக் கல்லூரியில் நடைபெறுகிறது. காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடக்கும் இம்முகாமில் 10, 12, டிப்ளமோ மற்றும் டிகிரி முடித்த 18 வயது பூர்த்தியடைந்த பெண்கள் பங்கேற்றுப் பயனடையுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. உடனே SHARE பண்ணுங்க.

News February 17, 2026

தருமபுரியில் ரத்த காயங்களுடன் கிடந்த பெண் சாவு!

image

வேடம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பீரன் (80), இவரது மனைவி பைரி (75). நேற்று முன்தினம் அதிகாலை வேடம்பட்டி-கிட்டம்பட்டி சாலையோரம் ரத்த காயங்களுடன் மூதாட்டி கிடந்துள்ளார். தகவலறிந்த பஞ்சப்பள்ளி போலீசார் மூதாட்டியை மீட்டு சிகிச்சைக்காக பாலக்கோடு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி மூதாட்டி பைரி உயிரிழந்தார். இது குறித்து பஞ்சப்பள்ளி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News February 17, 2026

அறிவித்தார் தருமபுரி ஆட்சியர்!

image

தருமபுரி மாவட்ட பள்ளி கல்வித்துறை மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை இணைந்து நடத்தும் 18 வயதிற்கு உட்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை வழங்கும் முகாம் நாளை (பிப் 18) நடைபெற உள்ளது. பென்னாகரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் காலை 9:30 மணி முதல் மதியம் 1 மணி வரை இந்த முகாம் நடைபெற உள்ளது. எனவே இந்த வாய்ப்பை மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்திக் கொள்ள மாவட்ட ஆட்சியர் அறிவித்து உள்ளார்.

error: Content is protected !!