News January 10, 2026
குமரி: இனி எல்லா CERTIFICATE-ம் உங்க WhatsAPP-ல்

குமரி மக்களே, பிறப்பு, இறப்பு, வருமானச் சான்றிதழ்கள், சாதி சான்றிதழ் என 50 வகையான அரசு சான்றிதழ்களை பெற இனி அரசு அலுவலகலகம் சென்று அலைய வேண்டியதில்லை. தமிழக அரசு மெட்டா நிறுவனத்துடன் இணைந்து 7845252525 என்ற வாட்ஸ்அப் எண்ணை அறிமுகம் செய்துள்ளது. இதில் தங்களுக்கு தேவையான சான்று பற்றி குறுஞ்செய்தியும், தகுந்த ஆதாரமும் அனுப்பினால் போதும். தேவையான சான்றிதழ் உங்கள் வாட்ஸ் அப்-க்கே வரும்.
Similar News
News February 6, 2026
குமரி: பைக் மீது கார் மோதிய விபத்தில் இளைஞர் பலி

இரணியல் பாறைக்காவிளையை சேர்ந்தவர் டிரைவர் ரெதீஸ் (33). மனைவியும் 2 மகள்களும் உள்ளனர். ரெதீஷ் நேற்று மாலை பைக்கில் நாகர்கோவில் சென்று விட்டு ஊருக்கு திரும்பி கொண்டிருந்தார். சுங்கான்கடை அருகே வந்தபோது, பின்னால் வந்த கேரள கார், பைக்கின் பின்புறம் மோதியதில், தலையில் காயம் ஏற்பட்டது. தனியார் மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதித்த நிலையில், நேற்று இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
News February 6, 2026
கன்னியாகுமரி: இரவு ரோந்து பணி அதிகாரிகள் விவரம்

(06.02.2026) கன்னியாகுமரி மாவட்டம் இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி இரவு நேரங்களில் வெளியில் பயணிக்கும் நபர்கள் ஆபத்தான சூழலில் மேலே அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ள எண்களை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. .
News February 6, 2026
குமரி: வாடகை வீட்டில் இருப்போர் கவனத்திற்கு.!

கன்னியாகுமரி மக்களே வாடகை வீடுகளில் குடியீருக்கீங்களா? 3 மாதத்துக்கு முன்னரே வீட்டு ஓனர் வீட்டு வாடகையை உயர்த்துவது (அ) முன்னறிவிப்பின்றி உங்களை தீடீரென்று வீட்டை காலி செய்ய சொன்னால் என்ன செய்வது என்று யோசீக்கிறீர்களா? இனி இதை பண்ணுங்க. உங்களுக்காகவே (TNRRLA 2017) என்ற சட்டத்தின் கீழ் குமரி வாடகை தீர்வாளர் அதிகாரியிடம் (04652279833, 04651250722) புகாரளியுங்க.மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க.


