News January 10, 2026

மக்கள் நாயகன் காலமானார்.. கண்ணீர் அஞ்சலி

image

சுதந்திர மூச்சுக்காற்றை சுவாசித்த காந்தியவாதி மா.வன்னிக்காளையின் (92) சுவாசம் நின்றுபோனது. உடல் தகனம் செய்யப்பட்டாலும், அவரது கருத்துகளும், போதனைகளும் ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு உத்வேகத்தை அளித்துக்கொண்டே இருக்கும். ஜனாதிபதியின் தேசிய விருது, தமிழக கவர்னரின் சிறந்த காந்தியவாதி விருது என பல்வேறு விருதுகளை பெற்றுள்ள அவருக்கு நம்முடைய ஆத்மார்த்தமான இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம்.

Similar News

News February 5, 2026

எந்த நீரில் தலைக்கு குளிப்பது நல்லது?

image

தலைக்கு குளிக்கையில் நாம் பயன்படுத்தும் நீரும் முடி உதிர்வுக்கான காரணமாக அமைகிறது. அந்தவகையில் வெந்நீரில் தலைக்கு குளித்தால் கூந்தல் வறட்சியடையும், ஈரப்பதம் உறிஞ்சப்படும், அதிகப்படியான எண்ணெய் உற்பத்தியை ஏற்படுத்தக்கூடும். அதுவே, குளிர்ந்த நீரில் குளித்தால் முடியின் ஈரப்பதம் தக்கவைக்கப்படும், கூந்தல் ஆரோக்கியம் மேம்படும், தலைமுடி பளபளக்கும், முடி உதிர்வு தடுக்கப்படும். SHARE IT

News February 5, 2026

பிப்ரவரி 5: வரலாற்றில் இன்று

image

*1971–அப்பல்லோ 14 விண்கலம் நிலவில் தரையிறங்கியது *1976–நடிகர் அபிஷேக் பச்சன் பிறந்தநாள் *1985–கிறிஸ்டியானோ ரொனால்டோ பிறந்தநாள் *1992–நெய்மார் பிறந்தநாள் *2000–இசையமைப்பாளர் டி.ஜி.லிங்கப்பா நினைவு நாள் *2023–நடிகர் டி.பி.கஜேந்திரன் நினைவு நாள்

News February 5, 2026

ஈரான், US அணுசக்தி ஒப்பந்தம்.. தேதி குறிச்சாச்சு!

image

ஈரான், US இடையிலான அணுசக்தி ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாகவுள்ளது. இதுபற்றிய பேச்சுவார்த்தை ஓமனின் மஸ்கட் நகரில் வரும் நாளை நடைபெறும் என ஈரானின் வெளியுறவு அமைச்சர் கூறியுள்ளார். முன்னதாக, அணுசக்தி ஒப்பந்தத்திற்கு உடன்படாவிட்டால் ஈரான் மீது தாக்குதல் நடத்தப்படும் என டிரம்ப் எச்சரித்திருந்தார். இதை சுப்ரீம் லீடர் கொமேனி எதிர்த்த நிலையில், அணுசக்தி ஒப்பந்த பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.

error: Content is protected !!