News January 10, 2026

அரியலூர் மாவட்டத்தில் 3 பேர் கைது!

image

உடையார்பாளையம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டபோது, வேலப்பன் செட்டி ஏரிக்கரையில் நாகல்குழி கிராமத்தைச் சேர்ந்த செல்லையா (29), பிலாக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த சேகர் (54) மற்றும் இளமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த குணசேகரன் (26) ஆகியோர் மது அருந்திவிட்டு பொதுமக்களுக்கு இடையூறு செய்து கொண்டிருந்தனர். இதையடுத்து 3 பேர் மீதும் உடையார்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவர்களை கைது செய்தனர்.

Similar News

News February 2, 2026

அரியலூர்: சிலிண்டர் வாங்கும்போது இது முக்கியம்!

image

அரியலூர் மக்களே, உணவு பொருளுக்கு எப்படி காலாவதி தேதி உள்ளதோ அதேபோல், நீங்கள் சிலிண்டர் வாங்கும்போது உட்புறத்தில் A.26, B.26, C.26, D.26 (A.26-மார்ச் – 2026 என்று அர்த்தம்) என கேஸ் சிலிண்டர்களுக்கும் காலாவதி தேதி குறிப்பிடப்படும்.
A – (Jan/Feb/Mar),
B – (Apr/May/Jun),
C – (Jul/Aug/Sep),
D – (Oct/Nov/Dec),
காலாவதி சிலிண்டராக இருந்தால் 1800-2333-555 புகார் அளியுங்க. இதை அனைவரும் SHARE பண்ணுங்க!

News February 2, 2026

அரியலூர்: கட்டாயம் உங்கள் போனில் இருக்க வேண்டிய எண்கள்!

image

1. மனித உரிமைகள் ஆணையம் : 044-22410377,
2. அரசு பேருந்து குறித்த புகார்கள் : 1800-599-1500,
3. ஊழல் புகார் தெரிவிக்க : 044-22321090,
4. குழந்தைகளுக்கான அவசர உதவி : 1098,
5. முதியோருக்கான அவசர உதவி : 1253,
6. தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி : 1033,
7. பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091.
இத்தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

News February 2, 2026

அரியலூர் மாவட்ட கலெக்டர் அறிவிப்பு

image

அரியலூர் மாவட்ட வேளாண் விரிவாக்க மையங்களில் 45 மெட்ரிக் டன் நெல் விதைகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது என்று மாவட்ட கலெக்டர் பொ. இரத்தினசாமி தெரிவித்துள்ளார். மேலும், நெல் விதைகள் விதை கிராம திட்டத்தில் ஒரு கிலோ ரூ.17.50 வழங்கப்படுகிறது என்றும் நெல் நுண்சத்து, உயிர் உரங்கள். சூடோமோனாஸ், ட்ரைக்கோடெர்மா போன்ற உயிரியல் காரணிகள் போதுமான அளவில் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். SHARE பண்ணுங்க!

error: Content is protected !!