News January 10, 2026
சற்றுமுன்: ஹரி நாடார் அதிரடி கைது

தொழிலதிபர் ஒருவருக்கு ₹35 கோடி கடன் வாங்கித் தரும் பொருட்டு, காசோலையை சத்திரிய சான்றோர் படை கட்சி தலைவர் ஹரி நாடார் வழங்கியுள்ளார். இதற்காக ₹70 லட்சம் கமிஷனும் அவர் பெற்றுள்ளார். ஆனால், காசோலை போலியானது என தெரியவர, இதுகுறித்து தொழிலதிபர் போலீஸில் புகாரளித்துள்ளார். இதனையடுத்து, மோசடி தொடர்பாக ஹரி நாடார் & அவரது கூட்டாளி பாலு ஆகியோரை போலீஸார் கைது செய்து புழல் சிறையில் அடைத்துள்ளனர்.
Similar News
News January 24, 2026
சற்றுநேரத்தில் அதிமுகவில் இணைகிறார்.. ஓபிஎஸ் அதிர்ச்சி

OPS அணியில் இருந்த ராஜ்யசபா MP தர்மர் இன்னும் சற்றுநேரத்தில் EPS முன்னிலையில் மீண்டும் அதிமுகவில் இணைய உள்ளார். மனோஜ் பாண்டியன், JCD பிரபாகர், வைத்திலிங்கம் உள்ளிட்டோரை தொடர்ந்து தர்மரும் தனது அணியிலிருந்து விலகுவது OPS-க்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. ராமநாதபுரத்தை சேர்ந்த தர்மருக்கு 2022-ம் ஆண்டில் நடைபெற்ற ராஜ்யசபா தேர்தலில் OPS தான் MP சீட் பெற்றுத் தந்தார் என்பது கவனிக்கத்தக்கது.
News January 24, 2026
பென்ஷன் தொகை ₹3,400 ஆக உயர்வு: CM ஸ்டாலின்

சத்துணவு அமைப்பாளர்கள், கிராம ஊராட்சி செயலர்களுக்கு வழங்கப்படும் மாதாந்தர பென்ஷன் ₹2,000-லிருந்து ₹3,400-ஆக உயர்த்தி வழங்கப்படும் எனச் சட்டப்பேரவையில் CM ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதேபோல் அவர்களுக்கு வழங்கப்படும் பணி நிறைவு தொகையானது ₹1 லட்சத்திலிருந்து ₹2 லட்சமாக உயர்த்தப்படுவதாகவும் தெரிவித்துள்ளார். குறு அங்கன்வாடி பணியாளர்கள், வனக் களப்பணியாளர்களுக்கும் இது பொருந்தும்.
News January 24, 2026
விஜய் போட்டியிடும் தொகுதி இதுவா?

விஜய் எந்த தொகுதியில் போட்டியிடப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. இந்நிலையில், அவர் சென்னை விருகம்பாக்கம் தொகுதியில் போட்டியிட அதிக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. இத்தொகுதியில் திமுகவில் உள்கட்சி பூசல் நிலவுகிறதாம். இது விஜய்க்கு சாதகமாக அமையும் என்பதால் இதுகுறித்த தீவிர ஆலோசனையில் தவெக இறங்கியிருப்பதாக கூறப்படுகிறது. இதுபற்றிய Official தகவலுக்காக காத்திருப்போம்.


