News May 4, 2024

தொடர் வெற்றி குறித்து ஜெய்ஸ்வால் மகிழ்ச்சி

image

ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணி சிறப்பாக விளையாடி வருவதாக அந்த அணி வீரர் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார். ஆரம்பம் முதல் ராஜஸ்தான் அணி சிறப்பான வழியில் பயணிப்பதாக தெரிவித்த அவர், ஐபிஎல் தொடரின் இறுதி வரை அது தொடரும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார். 2024 ஐபிஎல் தொடரில், ராஜஸ்தான் 10 போட்டிகளில் விளையாடி 8 வெற்றி, 2 தோல்விகளுடன் 16 புள்ளிகளை பெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் நீடித்து வருகிறது.

Similar News

News August 31, 2025

ராசி பலன்கள் (31.08.2025)

image

➤ மேஷம் – தாமதம் ➤ ரிஷபம் – லாபம் ➤ மிதுனம் – அச்சம் ➤ கடகம் – பகை ➤ சிம்மம் – வரவு ➤ கன்னி – நஷ்டம் ➤ துலாம் – முயற்சி ➤ விருச்சிகம் – ஊக்கம் ➤ தனுசு – நன்மை ➤ மகரம் – வெற்றி ➤ கும்பம் – சுகம் ➤ மீனம் – உற்சாகம்.

News August 30, 2025

இந்திய ராணுவத்தில் புதிய கமாண்டோ படை

image

இந்திய ராணுவத்தில் ‘பைரவ்’ எனும் புதிய கமாண்டோ படை பிரிவு உருவாக்கப்பட உள்ளது. ஏற்கனவே காலாட்படையில் இருக்கும் வீரர்களில் 250 பேரை தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு சிறப்பு பயிற்சி, நவீன ஆயுதங்கள், டிரோன்கள் வழங்கப்பட்டு இந்த படைப்பிரிவு உருவாக்கப்பட உள்ளது. முதற்கட்டமாக வரும் அக்.31-ம் தேதிக்குள் 5 யூனிட் வீரர்கள் பணியில் அமர்த்தப்பட உள்ளனர். இவர்கள் சீனா, பாகிஸ்தான் எல்லைகளில் நிறுத்தப்பட உள்ளனர்.

News August 30, 2025

USA-ன் 50% வரி: PM மோடிக்கு EPS கடிதம்

image

USA-ன் 50% வரியால் பாதிக்கப்பட்டுள்ள திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி தொழிலுக்கு உடனடி நிவாரணம் கோரி PM மோடிக்கு EPS கடிதம் எழுதியுள்ளார். ஏற்றுமதி இழப்பை சமாளிக்க இழப்பீடு, ஊக்கத்தொகை வழங்க வேண்டும் எனவும், பருத்தி நூலின் வரியில் தளர்வு அறிவிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். மேலும், உற்பத்தியாளர்களின் நிலுவையில் உள்ள கடன்களுக்கு வட்டியில் தளர்வு அளிக்கவும் கோரியுள்ளார்.

error: Content is protected !!