News January 10, 2026

தூத்துக்குடி: மருந்து குடித்து உயிரை விட்ட இளைஞர்

image

கயத்தாறு பகுதி சன்னதுபுதுக்குடியை சேர்ந்தவர் செல்வகணேஷ் (24). இவர் கங்கை கொண்டான் தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார். இந்நிலையில் சில நாட்களாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்த செல்வ கணேஷ், நேற்று திடீரென வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் களைக்கொல்லி மருந்து குடித்தார். மயங்கிய இவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இவர் உயிரிழந்தார்.

Similar News

News February 13, 2026

தூத்துக்குடி: GPay / PhonePe / Paytm Use பண்றீங்களா? கவனம்!

image

தூத்துக்குடி மக்களே இன்றைய காலத்தில் UPI பண பரிவர்த்தனைகள் அனைவரிடமும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800 419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் கிடைக்க வழிவகை செய்யப்படும். SHARE பண்ணுங்க

News February 13, 2026

JUST IN: தூத்துக்குடி எஸ்.பி திடீர் டிரான்ஸ்பர்!

image

தூத்துக்குடி மாவட்ட எஸ்.பியாக பணிபுரிந்து வரும் சிலம்பரசன் மாவட்டத்தில் பொறுப்பேற்று ஒரு சில மாதங்களே ஆனது. இந்த நிலையில் அவர் திடீரென தற்போது பணியிட மாற்றம் செய்யப்பட்டு சென்னை சட்டம் ஒழுங்கு எஸ்.பி-யாக பணியமர்த்தப்பட்டுள்ளார். மேலும், திருநெல்வேலி மேற்கு கமிஷனராக பணிபுரிந்து வரும் மதன் தூத்துக்குடி மாவட்ட எஸ்.பியாக பொறுப்பேற்க உள்ளார். இந்த திடீர் மாற்றம் பரபரப்பை கிளப்பி உள்ளது.

News February 13, 2026

தூத்துக்குடி : உங்களுக்கு ரூ. 5000 வரலையா ? – Apply லிங்க் !

image

தூத்துக்குடி மக்களே, கலைஞர் உரிமை தொகை (பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் = ரூ.3000) + கோடை நிதி ரூ.2000 என மொத்தம் ரூ.5000 இன்று தமிழக அரசு வழங்கி உள்ளது. உங்களுக்கு ரூ. 5000 வரலையா? இங்கு <>க்ளிக்<<>> செய்து உங்க பெயர், ரேஷன் எண், குடும்ப தலைவர் பெயர் பதிவிட்டு, ஆதார் கார்டு, ரேஷன் கார்டு ஆவணங்களை பதிவேற்றம் செய்து மேல்முறையீடு பண்ணுங்க. 30 நாளில் நல்ல தீர்வு கிடைக்கும். இது எல்லாருக்கும் தெரிய SHARE பண்ணுங்க!

error: Content is protected !!