News January 10, 2026
லேப்டாப்பில் ஸ்டாலின் படத்தை நீக்கினால் NO வாரண்டி!

TN அரசு அண்மையில் கல்லூரி மாணவர்களுக்கு இலவச லேப்டாப்களை வழங்கியது. இதில் CM ஸ்டாலின் மற்றும் EX CM கருணாநிதியின் போட்டோக்கள் இடம்பெற்றிருந்தன. ஆனால் லேப்டாப்பை வாங்கி கையோடு அந்த போட்டோஸை அழித்துவிட்டு தங்களுக்கு விருப்பமானவர்களின் ஸ்டிக்கர் ஒட்டுவதை பலர் செய்ய தொடங்கினர். இதனிடையே ஸ்டாலின், கருணாநிதி போட்டோஸ் இல்லை என்றால் லேப்டாப்புக்கு வாரண்டி கிடைக்காது என எல்காட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
Similar News
News January 23, 2026
Cinema 360°: ‘புருஷன்’ படப்பிடிப்பு தொடக்கம்

*விஜய் சேதுபதியின் ‘காந்தி டாக்கீஸ்’ படத்தில் இருந்து ஏதோ பாடல் வெளியாகியுள்ளது. *விஷாலின் ‘புருஷன்’ படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது. *’எதற்கும் துணிந்தவன்’ படத்திற்கு பிறகு மீண்டும் சூர்யா, பாண்டியராஜ் இணையவுள்ளதாக தகவல். *பிரபாஸின் ‘கல்கி 2’ படத்திற்கான இசையமைக்கும் பணிகளை தொடங்கிவிட்டதாக சந்தோஷ் நாராயணன் கூறியுள்ளார்.
News January 23, 2026
பள்ளி மாணவர்களே பரிசுகளை அள்ளுங்க.. சூப்பர் சான்ஸ்!

மாநில அளவில் பள்ளி மாணவர்களுக்கான கலைப் போட்டிகளை தமிழக அரசின் கலைப் பண்பாட்டுத் துறை அறிவித்துள்ளது. அதன்படி, குரலிசை, பரத நாட்டியம், ஓவியம், கிராமிய நடனம் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட உள்ளன. இதில், வெற்றி பெறும் மாணவர்களுக்கு பரிசுத் தொகையுடன் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட உள்ளது. இதுகுறித்த கூடுதல் விவரங்களை 044 – 28192152 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு அறியலாம். என்ன மாணவர்களே, ரெடியா!
News January 23, 2026
நாளை மக்களுக்கு தெளிவான மெசெஜ்: அண்ணாமலை

ஊழல் நிறைந்த திமுகவை அகற்றி, நம்பகத்தன்மை, சட்டத்தின் ஆட்சி மற்றும் தமிழகத்தின் வளர்ச்சியை மீட்டெடுப்போம் என அண்ணாமலை தெரிவித்துள்ளார். நாளை நடைபெறவிருக்கும் வரலாறு சிறப்பு மிக்க கூட்டமானது, தேர்தலுக்கான முன்னோட்டமாக அமைவதுடன், மக்களுக்கு தெளிவான செய்தியை தெரிவிக்கும் எனக் கூறிய அவர், NDA கூட்டணி ஒரு வளமான எதிர்காலத்துக்காக தமிழகத்தின் தேவைகளை பிரதிநிதித்துவப்படுத்துகிறது என்றார்.


