News January 10, 2026
கொலை வழக்கில் MLA விடுதலை

கொலை வழக்கில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் MLA தளி ராமச்சந்திரனை விடுதலை செய்து, கிருஷ்ணகிரி கோர்ட் தீர்ப்பளித்துள்ளது. 2013-ம் ஆண்டு பாஸ்கர் என்பவரை கொலை செய்ததாக தளி MLA ராமச்சந்திரன் உள்ளிட்ட 12 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கின் அனைத்து விசாரணைகளும் முடிந்த நிலையில், இன்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
Similar News
News February 15, 2026
விஜய்யை பார்த்து அண்ணா கட்சி தொடங்கினார்: உதயநிதி

விஜய் சேலம் கூட்டத்தில் பேசியது மற்றும் கூட்டங்களில் உயிரிழப்புகள் ஏற்படுவது குறித்து DCM உதயநிதி ஸ்டாலினிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு, உயிரிழப்பு ஏற்படுவது குறித்து நீங்கள் யாரிடம் கேட்கவேண்டும்? என்னிடமா கேட்கவேண்டும் என பதிலளித்தார். மேலும், திமுக குறித்த விஜய்யின் விமர்சனத்துக்கு, அண்ணாவே இவரைப் பார்த்துதான் திமுகவை ஆரம்பிச்சாரு தெரியுமா என கிண்டலாக கூறினார்.
News February 15, 2026
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (பிப்.15) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email – way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.
News February 15, 2026
நயினாரின் பேச்சு வருத்தமாக இருக்கு: வானதி ஸ்ரீனிவாசன்

விஜய் – த்ரிஷா குறித்து நயினார் பேசியது, வருத்தமளிப்பதாக வானதி ஸ்ரீனிவாசன் தெரிவித்துள்ளார். நயினார் பொதுவாக நாகரிகமாக பேசக்கூடியவர், ஆனால் ஏன் த்ரிஷா குறித்து அப்படி பேசினார் என்று தெரியவில்லை எனவும் கூறியுள்ளார். இந்த விவகாரத்தில் என கருத்து குறித்து அவரிடம் நேரடியாக பேசுவேன் என தெரிவித்த வானதி, அதேசமயம் இதில் கண்டனம் தெரிவிக்க திமுக காங்கிரஸுக்கு அருகதை கிடையாது எனவும் சாடியுள்ளார்.


