News May 4, 2024

ஒரே நாளில் ₹43,000 கோடி இழந்த முகேஷ் அம்பானி

image

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் குழும நிறுவனம், சில்லரை வர்த்தகம், தொலைத் தொடர்பு உள்ளிட்ட பல தொழில்களில் ஈடுபட்டுள்ளது. அந்நிறுவனத்தின் சந்தை மதிப்பு ₹19.43 லட்சம் கோடியாகும். நேற்று, அந்நிறுவனத்தின் பங்கு மதிப்பு காலையில் ₹2,933ஆக இருந்தது. வர்த்தக நேர முடிவில் 2.22% குறைந்து ₹2,868ஆக சரிந்தது. இதனால் முகேஷ் அம்பானிக்கு நேற்று ஒரே நாளில் ₹43,000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

Similar News

News November 17, 2025

வெளிமாநிலங்களுக்கு ஆம்னி பஸ்கள் இயங்காது

image

கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கு ஆம்னி பஸ்கள் இயக்கப்படாது என ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. கேரளாவில் சமீபத்தில் ஆம்னி பஸ்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இதன் எதிரொலியாக, கடந்த 7 நாள்களுக்கு மேல் மாநிலங்களுக்கு இடையேயான ஆம்னி பஸ்கள் இயங்கவில்லை. இந்நிலையில், வெளிமாநிலங்களுக்கு ஆம்னி பஸ்கள் இயங்காது என்றும், முதல்வர் இவ்விவகாரத்தில் தலையிட வேண்டும் எனவும் கூறியுள்ளது.

News November 17, 2025

வருவாய்த்துறையினரின் டிமாண்ட் என்ன?

image

நாளை <<18309481>>ஸ்ட்ரைக்கில்<<>> ஈடுபடவுள்ள வருவாய் துறையினர் பின்வரும் கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்: *SIR பணியால் அனைத்து நிலை அலுவலர்களுக்கும் நெருக்கடி, மனஉளைச்சல் ஏற்படுகிறது. இதற்கு நடவடிக்கை தேவை *மீட்டிங் என்ற பெயரில் துன்புறுத்தக்கூடாது *SIR பணிக்கு உரிய கால அவகாசம் வேண்டும் *BLO, BLA-க்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும் *பணிப்பளுவை கருத்தில் கொண்டு ஒரு மாத கால ஊதியத்தை மதிப்பூதியமாக வழங்க வேண்டும்.

News November 17, 2025

விஜய் கட்சிக்கு இதனால் பின்னடைவா?

image

SIR பணிகளில் மக்களுக்கு உதவ தவெகவில் போதுமான பூத் கமிட்டி ஆட்கள் இல்லை என பேசப்படுகிறது. ஒரு கட்சியின் வளர்ச்சிக்கு பூத் கமிட்டி அவசியம். திமுகவும், அதிமுகவும் அந்த பேஸ்மெண்ட்டை பலமாக வைத்திருப்பதால்தான் மக்கள் மத்தியில் நல்ல செல்வாக்குடன் இருக்கின்றன. எனவே தவெகவுக்கு இதனால் பின்னடைவு ஏற்படலாம் எனவும் கூடிய விரைவில் பூத் கமிட்டியை பலமாக கட்டமைக்க வேண்டும் எனவும் அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

error: Content is protected !!