News May 4, 2024
அமேதியில் 84% வாக்குகளை பெற்ற ராஜீவ் காந்தி

அமேதியில் 1980இல் நடைபெற்ற தேர்தலில் சஞ்சய் காந்தி வெற்றிபெற்ற நிலையில், சில மாதங்களிலேயே விமான விபத்தில் அவர் உயிரிழந்தாா். தொடர்ந்து வந்த இடைத்தேர்தலில் போட்டியிட்ட ராஜீவ் காந்தி, 84% வாக்குகளுடன் அபார வெற்றி பெற்றார். காங்கிரஸ் கோட்டையாக இருந்துவந்த அமேதியில், 2019இல் ராகுல் தோற்றார். தற்போது, அவர் ரேபரேலி தொகுதிக்கு மாறிய நிலையில், அமேதியில் கே.எல்.சர்மா களமிறக்கப்பட்டுள்ளார்.
Similar News
News August 31, 2025
ஜெர்ஸி ஸ்பான்ஸர்ஷிப்பிற்கு ₹452 கோடி விலை

இந்திய அணியின் ஜெர்ஸி ஸ்பான்ஸர்ஷிப்பிற்கு BCCI ₹452 கோடி விலை நிர்ணயித்துள்ளது. 2025 முதல் 2028 வரை 3 ஆண்டுகாலத்திற்கு இந்த ஸ்பான்ஸர்ஷிப் ஒப்பந்தம் போடப்படும் எனவும், 140 போட்டிகள் இதில் அடங்கும் என்றும் BCCI வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. முன்னதாக, ஆன்லைன் கேமிங் தடை சட்டம் அமலானதை தொடர்ந்து, ஜெர்ஸி ஸ்பான்ஸராக இருந்த Dream 11 முன்கூட்டியே வெளியேறியது.
News August 31, 2025
ராசி பலன்கள் (31.08.2025)

➤ மேஷம் – தாமதம் ➤ ரிஷபம் – லாபம் ➤ மிதுனம் – அச்சம் ➤ கடகம் – பகை ➤ சிம்மம் – வரவு ➤ கன்னி – நஷ்டம் ➤ துலாம் – முயற்சி ➤ விருச்சிகம் – ஊக்கம் ➤ தனுசு – நன்மை ➤ மகரம் – வெற்றி ➤ கும்பம் – சுகம் ➤ மீனம் – உற்சாகம்.
News August 30, 2025
இந்திய ராணுவத்தில் புதிய கமாண்டோ படை

இந்திய ராணுவத்தில் ‘பைரவ்’ எனும் புதிய கமாண்டோ படை பிரிவு உருவாக்கப்பட உள்ளது. ஏற்கனவே காலாட்படையில் இருக்கும் வீரர்களில் 250 பேரை தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு சிறப்பு பயிற்சி, நவீன ஆயுதங்கள், டிரோன்கள் வழங்கப்பட்டு இந்த படைப்பிரிவு உருவாக்கப்பட உள்ளது. முதற்கட்டமாக வரும் அக்.31-ம் தேதிக்குள் 5 யூனிட் வீரர்கள் பணியில் அமர்த்தப்பட உள்ளனர். இவர்கள் சீனா, பாகிஸ்தான் எல்லைகளில் நிறுத்தப்பட உள்ளனர்.