News January 10, 2026

நாமக்கல்லில் முட்டை விலை ரூ. 5.60- ஆக நீடிப்பு

image

நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை ரூ. 5.60- ஆக விற்பனையாகி வந்த நிலையில், இன்று நாமக்கல்லில் நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில், அதன் விலையில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. எனவே முட்டை கொள்முதல் விலை, ரூ. 5.60- ஆகவே நீடிக்கின்றது. கடந்த 5 நாட்களில் மட்டும் முட்டை கொள்முதல் விலை 80 காசுகள் சரிவடைந்து இருப்பதால் பண்ணையாளர்கள் கவலை அடைந்து உள்ளனர்.

Similar News

News January 23, 2026

நாமக்கல்லில் கறிக்கோழி, முட்டை விலை நிலவரம்

image

நாமக்கல் மண்டலத்தில் இன்றைய (23-01-2025) காலை நிலவரப்படி, கறிக்கோழி பண்ணை கொள்முதல் விலை (உயிருடன்) ரூ.145- ஆகவும், முட்டை கொள்முதல் விலை ரூ. 80- ஆகவும் விற்பனையாகி வருகின்றது. அதேபோல், முட்டை கொள்முதல் விலை ரூ. 5.00 ஆகவும் நீடித்து வருகிறது. தைப்பூசம் நெருங்குவதை யொட்டி முட்டை விலை சரிவடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது

News January 23, 2026

நாமக்கல்: ரூ.755 செலுத்தினால் ரூ.15 லட்சம் காப்பீடு!

image

இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும், ‘இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி’, பொதுக் காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து, ஆண்டிற்கு வெறும் ரூ.520, ரூ.555, ரூ.755 பீரீமியத்தில், ரூ.5 லட்சம், ரூ.10 லட்சம், ரூ.15 லட்சம் மதிப்புள்ள விபத்துக் காப்பீட்டு திட்டத்தை வழங்குகிறது. 18 வயது முதல் 65 வயது உள்ளவர்கள் இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் சேரலாம். உடனே உங்கள் அருகிலுள்ள தபால் நிலையத்தை அனுகவும். பகிரவும்

News January 23, 2026

நாமக்கல்: ரேஷன் கார்டுதாரர்களே கேட்டுக்கோங்க!

image

நாமக்கல் மாவட்டத்தில் ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் செய்வது மற்றும் புதிய ரேஷன் கார்டு விண்ணப்பித்தல் தொடர்பான பொது வினியோகத்திட்ட குறைதீர்க்கும் முகாம் நாளை (சனிக்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நாமக்கல், ராசிபுரம், மோகனூர், சேந்தமங்கலம், கொல்லிமலை, திருச்செங்கோடு, பரமத்திவேலூர் மற்றும் குமாரபாளையம் வட்டங்களில் உள்ள வட்ட வழங்கல் அலுவலகங்களில் நடைபெற உள்ளது. SHAREIT

error: Content is protected !!