News January 10, 2026
கோவை : இரவு ரோந்து போலீசார் விவரம்

கோவை மாவட்டத்தில் இன்று (09.01.2026) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
Similar News
News January 23, 2026
கோவை: தவறாக அனுப்பிய Payment-ஐ இனி திரும்ப பெறலாம்

கோவை மக்களே, செல்போன் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பரிவர்த்தனைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இத்தகைய சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு இதை SHARE பண்ணுங்க!
News January 23, 2026
கோவை அருகே சோகம்: விஷம் குடித்து தற்கொலை!

கோவை தெலுங்குபாளையம் முத்தையா தெருவை சேர்ந்தவர் மங்கம்மாள்(56). தனியே வசித்து வந்தார். இவரது மகன் அவ்வப்போது வந்து பார்த்து விட்டு செல்வதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த சில மாதங்களாகவே இவர், தீராத வயிற்று வலி காரணமாக அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் இவர் விஷம் குடித்து தற்கொலை செய்துள்ளார். இச்சம்பவம் குறித்து செல்வபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.
News January 23, 2026
கோவையில் ஒட்டப்பட்ட விஜய் போஸ்டரால் பரபரப்பு!

தமிழகத்தில் 2026ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை முதல்முறையாக நடிகர் விஜய், தமிழக வெற்றி கழகம் மூலமாக சந்திக்கின்றார். இந்நிலையில் அனைத்து கட்சிகளுக்கும் சின்னம் ஒதுக்கபட்ட நிலையில், தவெகவுக்கு விசில் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து கோவை மாவட்ட தவெகவினர், தமிழகம் தளபதிக்கு என ஒட்டிய போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


