News January 9, 2026
எளிமையான முதலமைச்சர்: மலேசிய தமிழர்கள் பெருமிதம்

புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியைச் சந்தித்த மலேசியத் தமிழர்கள் பெரும் மகிழ்ச்சியடைந்தனர். “இவ்வளவு எளிமையான முதலமைச்சரை இதுவரை பார்த்ததே இல்லை” எனத் தெரிவித்த அவர்கள், ரங்கசாமியின் பணிவு, நடத்தை, பேசும் முறை ஆகியவை மனதை கவர்ந்ததாகக் கூறினர். மலேசியத் தமிழர்கள், புதுச்சேரியின் முன்னேற்றத்திற்காக தாங்களும் பங்களிக்கத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தனர்.
Similar News
News January 25, 2026
புதுச்சேரி: மழை எச்சரிக்கை!

புதுச்சேரி மாற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று மற்றும் நாளை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் மேல் கிழக்கு திசை வளிமண்டல அலை நிலவுவதால் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE பண்ணுங்க!
News January 25, 2026
புதுச்சேரி: நிலம் கையகப்படுத்தத் திட்டம்

புதுச்சேரி விமான நிலைய விரிவாக்கத்திற்கான நிலம் கையகப்படுத்தும் பணிக்கு, விமான நிலையங்கள் ஆணையம், (AAI) ஒரு விரிவான திட்ட அட்டவணையை (Land Plan Schedule – LPS) சுற்றுலாத் துறைக்கு சமர்ப்பித்துள்ளது. இதில், புதுச்சேரி மற்றும் அண்டை மாவட்டமான, தமிழ்நாட்டின் விழுப்புரம் மாவட்ட கிராமங்களில் உள்ள நிலங்களை கையகப்படுத்துவதை உள்ளடக்கியுள்ளது.
News January 25, 2026
புதுச்சேரி: ரூ.29.5 லட்சம் மோசடி

புதுச்சேரி சஞ்சீவ் நகரை சேர்ந்த கருணாகரன், தனது நிறுவனத்தின் கப்பல் கட்டும் திட்டத்திற்கு முதலீட்டாளர்களை ஈர்க்க, ஜோதி பிரகாஷ் என்பவருடன் 2025ம் ஆண்டு ஒப்பந்தம் செய்துள்ளார். கருணாகரனிடமிருந்து ரூ.29.5 லட்சத்தை பெற்ற ஜோதி பிரகாஷ், போலியான ஆவணங்களைக் காட்டி காலம் கடத்தி வந்தார். இதனால் கருணாகரன் அளித்த புகாரின் பேரில் கோரிமேடு தன்வந்திரி நகர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.


