News January 9, 2026
ஈரோடு: பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள் இனி What’s App-ல்

ஈரோடு மக்களே பிறப்பு/இறப்பு சான்றிதழ், வருமான சான்று, பட்டா, சொத்துவரி, வேளான் திட்டங்கள்,மாணவர்களுக்கு உதவித்தொகை மற்றும் மின்சாரக் கட்டணம் செலுத்துதல் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட அரசு சேவைகளை இனி வாட்ஸ்அப் மூலமாகவே பொதுமக்கள் எளிதாகப் பெறலாம். இதற்காகத் தமிழக அரசு 7845252525 என்ற பிரத்யேக வாட்ஸ்அப் எண்ணிற்கு ‘Hi’ என மெசேஜ் அனுப்பினால் போதும். (ஷேர் பண்ணுங்க).
Similar News
News January 13, 2026
ஈரோடு கலெக்டர் உத்தரவு

ஈரோட்டில் திருவள்ளுவர் தினம் (ம) குடியரசு தினத்தை முன்னிட்டு மதுக்கடைகளை மூட கலெக்டர் கந்தசாமி உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், திருவள்ளுவர் தினம் (ஜன.16) (ம) குடியரசு தினத்தை (ஜன.26) முன்னிட்டு மதுபானக் கடைகள், அதனுடன் இணைந்த பார்கள் 2 நாள்கள் கட்டாயம் மூடப்பட்டிருக்க வேண்டும். உத்தரவை மீறும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
News January 13, 2026
தவறி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

மாதம்பாளையத்தை சேர்ந்தவர் குபேரன். கூலி தொழிலாளியான இவர் அதே பகுதியில் உள்ள தோட்டத்தில் சோளத்தட்டு போர் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது கயிறு கட்ட முயற்சி செய்ததில் கயிறு அறுந்து குபேரன் கீழே தவறி விழுந்து தலை கழுத்தில் பலத்த காயம் அடைந்தார். தொழிலாளர்கள் அவரை மீட்டு கோவை தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் குபேரன் உயிரிழந்தார் போலீசார் விசாரிக்கின்றனர்.