News January 9, 2026
நாளை பள்ளிகள் விடுமுறை இல்லை.. கலெக்டர்கள் அறிவிப்பு

சென்னையைத் தொடர்ந்து திருவள்ளூர் மாவட்டத்திலும் நாளை(சனிக்கிழமை) அனைத்து பள்ளிகளும் செயல்படும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. மழை விடுமுறையை ஈடுசெய்யும் விதமாக இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, செவ்வாய்க்கிழமை பாடவேளையை பின்பற்றி வகுப்புகளை நடத்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு முதன்மை கல்வி அலுவலர் அறிவுறுத்தியுள்ளார். மாணவர்களே, ரெடியா இருங்க!
Similar News
News January 29, 2026
ராசி பலன்கள் (29.01.2026)

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.
News January 28, 2026
காதலியை தலையை துண்டித்து கொலை செய்த காதலன்

ஆக்ராவில் HR -ஆக பணிபுரிந்த பெண் மற்றொரு ஆணுடன் தொடர்பில் இருந்ததாக அலுவலகத்திலேயே துண்டு துண்டாக வெட்டப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காதலி மின்கி சர்மா வேறொருவருடன் தொடர்பில் இருப்பதாகக் கூறி ஏற்பட்ட சண்டையில் காதலன் வினய், மிக்னியை கொலை செய்து, உடலை யமுனை ஆற்றுப் பாலம் அருகே வீசியுள்ளார். உடலை கண்டெடுத்த போலீசார், CCTV உதவியுடன் வினயை கைது செய்தனர்.
News January 28, 2026
தங்கம் விலை தலைகீழாக மாறுகிறது

USA மத்திய வங்கி(The Fed) கூட்டம் 2 நாள்களாக நடந்த நிலையில் இன்று (நள்ளிரவு 1 மணிக்கு மேல்) வரி விகித அறிவிப்பு வெளியாகிறது. இந்த வட்டி விகித முடிவு தான் தங்கத்தின் விலையை தீர்மானிக்கும். வட்டி விகிதம் குறைந்தால் தங்கம் விலையில் பெரிய மாற்றம் இருக்கும். அதேநேரம், டாலர் பலவீனமடைவதால் வட்டி விகிதம் உயரும் பட்சத்தில், விலை கணிசமாக உயரும். அதனால், இந்த அறிவிப்புக்காக இந்திய நாடே காத்துக் கிடக்கிறது.


