News January 9, 2026

திருவள்ளூர் அருகே SI தற்கொலை

image

திருவள்ளூர், ஆர்.கே.பேட்டை காவல் நிலையத்தில் சிறப்பு எஸ்.எஸ்.ஐ.யாகப் பணியாற்றி வந்த குமரன் (59), தனது சித்தி வேதவல்லி இறந்த சோகத்தைத் தாங்க முடியாமல் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். நேற்று இரவு வீட்டில் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். சிறு வயதிலேயே பெற்றோரை இழந்த இவரை, சித்தி வேதவல்லி படிக்க வைத்து போலீஸ் துறையில் சேர உதவியுள்ளார். அதிக பாசத்தால் விபரீத முடிவு எடுத்துள்ளார்.

Similar News

News February 3, 2026

புழல் அருகே பரிதாப பலி!

image

திருவள்ளூர்: செங்குன்றத்தை அடுத்த சோழவரம் குமரன் நகர் 5ஆவது தெருவைச் சேர்ந்தவர் குகன்(21). இவர் அம்பத்தூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். நேற்று முன் தினம் இரவு பணியை முடித்து இவர் பைக்கில் திரும்பிய போது, ஜி.என்.டி சாலையில் வந்த தனியார் பஸ் இவர் மீது மோதியதில், படுகாயமடைந்தார். பின்னர், சிகிச்சை அளிக்கப்பட்டும், பலனின்ப்றி நேற்று(பிப்.2) பரிதாபமாக உயிரிழந்தார்.

News February 3, 2026

திருவள்ளூரில் துடித்துடித்து பலி!

image

ஆர்.கே.பேட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வெடியங்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் ஜோதி(38). இவரது கணவர் தனபால்(53). இவர்களது வீட்டின் கீழ் தளத்தில் விசைத் தறிகள் வைத்து தொழில் செய்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று(பிப்.2) விசைத்தறிகளை இயக்க சென்ற ஜோதி, மின்சாரம் தாக்கி மயங்கினார். அவரது கணவர் உடனே அவரை சிகிச்சைக்கு அழைத்துச் சென்றார். அதில், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

News February 3, 2026

திருத்தணி: சிறுமிக்கு காதல் தொல்லை!

image

திருவள்ளூர்: திருத்தணி சந்து தெருவைச் சேர்ந்தவர் ஹரிஷ்(23). இவர் 17 வயது சிறுமியை கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்ததாகத் தெரிகிறது. இந்நிலையில், ஹரிஷிடம் பேசுவதைத் தவிர்த்து வந்தார் அச் சிறிமி. இதனால் ஆத்திரமடைந்த ஹரிஷ், ‘நாம் ஒன்றாக இருக்கும் புகைப்படத்தை சமூக வளைதளங்களில் வெளியிடுவேன்’ என மிரட்டியுள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் புகாரில் ஹரிஷை போலீசார் கைது செய்தனர்.

error: Content is protected !!