News January 9, 2026
புதிய தொழிற்பள்ளிகள் துவங்க அழைப்பு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 2026-27 கல்வியாண்டில் புதிய தொழிற்பள்ளிகள் தொடங்க விரும்புவோர் பிப்ரவரி 28-க்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். அங்கீகாரம் புதுப்பித்தல் மற்றும் கூடுதல் இடங்களுக்கும் விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தகுதியுள்ளவர்கள் www.skilltraining.tn.gov.in இணையதளத்தைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் ச.தினேஷ் குமார் தெரிவித்துள்ளார்.
Similar News
News January 26, 2026
கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை அறிவிப்பு!

குடியரசு தினத்தை முன்னிட்டு கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை சார்பில் பொதுமக்களுக்கு வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. அரசியலமைப்பின் மதிப்புகள், தேசிய ஒற்றுமை மற்றும் சமூக நல்லிணக்கத்தை காக்க அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும் என காவல்துறை வலியுறுத்தியுள்ளது. சட்டம்-ஒழுங்கு பாதுகாப்பு, மக்கள் சேவை ஆகியவற்றில் தொடர்ந்து அர்ப்பணிப்புடன் செயல்படுவோம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News January 26, 2026
கிருஷ்ணகிரி: ரூ.6 செலுத்தி ரூ.1 லட்சம் பெறலாம்!

கிருஷ்ணகிரி மக்களே, போஸ்ட் ஆபீஸில் ‘பால் ஜீவன் பீமா யோஜனா’ என்ற திட்டத்தின் கீழ் நாள் ஒன்றுக்கு வெறும் ரூ.6 பிரீமியமாக செலுத்தினால், 5 வருடங்கள் கழித்து ரூ.1 லட்சம் வரை ஆயுள் காப்பீடு கிடைக்கும். இதனை 5 முதல் 20 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் பெயரில் தொடங்கலாம். கூடுதல் தகவலுக்கு உங்கள் அருகிலுள்ள போஸ்ட் ஆபீஸ்-ஐ அணுகவும். இந்த நல்ல தகவலை SHARE பண்ணுங்க.
News January 26, 2026
கிருஷ்ணகிரி MLA மதியழகன் குடியரசு தின வாழ்த்து

குடியரசு தினத்தை முன்னிட்டு, கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திமுக சார்பில் பாகூர் சட்டமன்ற உறுப்பினர் தி.மதியழகன் இன்று (ஜன.26) பொதுமக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அரசியலமைப்பு வழங்கிய உரிமைகள் அனைவருக்கும் சமமாக கிடைக்க வேண்டும் என வலியுறுத்தி, ஒற்றுமை, சமத்துவம், வளர்ச்சி ஆகியவற்றை நோக்கி நாடு முன்னேற வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.


