News January 9, 2026
இனியன் சம்பத் காலமானார்

‘சொல்லின் செல்வர்’ ஈவிகே சம்பத்தின் மகனும், தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் முன்னாள் தலைவருமான இனியன் சம்பத் காலமானார். திமுக, காங்., அதிமுக ஆகிய கட்சிகளில் இருந்த இனியன் சம்பத், 2016-ல் ‘அம்மா திமுக’ என்ற புதிய கட்சியை தொடங்கினார். சமீபகாலமாக உடல்நலக்குறைவால் அரசியலில் இருந்து ஒதுங்கியிருந்த அவர், இன்று உயிரிழந்தார். அவரது மறைவுக்கு செல்வப்பெருந்தகை உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Similar News
News February 15, 2026
மகா சிவராத்திரி: இன்று சிக்கன், மட்டன் சாப்பிடாதீங்க!

இன்று மகா சிவராத்திரி தினத்தன்று மறந்தும் இந்த தவறுகளை செய்திடாதீர்கள்: கெட்ட வார்த்தை பேசக்கூடாது *இரவு அதிகமாக உணவு உட்கொள்ளக் கூடாது *விரதத்தின் போது, சிக்கன், மட்டன் உள்ளிட்ட எந்த ஒரு அசைவ உணவும் சாப்பிடக்கூடாது *எந்த ஒரு தீயப்பழக்கமும் அதாவது மது, புகைப்பிடித்தல் கூடாது *இரவு விழித்திருக்க வேண்டும் என்பதற்காக பகலில் உறங்கக்கூடாது *சிவபெருமானுக்கு இளநீர் படைப்பதை தவிர்ப்பது நல்லது. SHARE IT.
News February 15, 2026
இந்த தேர்தல் MGR – நம்பியார் சண்டை: செல்லூர் ராஜு

உலகம் சுற்றும் வாலிபன் படத்தில் MGR, நம்பியாரை புரட்டி எடுப்பது போல் திமுகவை EPS புரட்டி எடுப்பதாக செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார். இந்த தேர்தல் நம்பியாருக்கும் MGR-க்கும் இடையே நடக்கும் சண்டைபோல என்று தெரிவித்த அவர், அதிமுகவுக்கு பயந்துதான் திமுக மகளிருக்கு ₹5000 கொடுத்துள்ளதாகவும் விமர்சித்துள்ளார். திமுக தங்க கட்டியாக கொடுத்தால் கூட மக்கள் வாக்களிக்க மாட்டார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.
News February 15, 2026
OPS-க்கு TTV தினகரன் விடுத்த எச்சரிக்கை

தேர்தல் நெருங்கும் சூழலில் OPS இதுவரை கூட்டணி குறித்த தெளிவான முடிவை அறிவிக்கவில்லை. அம்மா ஆட்சி அமைய OPS உதவுவார் என தெரிவித்து வந்த TTV தினகரன் இப்போது பொறுமை இழந்து எச்சரிக்கை விடுக்கும் தொனியில் பேச தொடங்கிவிட்டார். OPS உங்கள் கூட்டணியில் இணைவாரா என அவரிடம் கேட்ட போது, அம்மாவின் ஆட்சி அமைய விரும்புவோர் NDA-வில் இணையாவிட்டால் அவர்களது முகத்திரை கிழிந்துவிடும் என கூறியுள்ளார்.


