News January 9, 2026
நாளை பள்ளிகளுக்கு விடுமுறை இல்லை.. கலெக்டர் அறிவிப்பு

சென்னையில் நாளை(சனிக்கிழமை) அனைத்து பள்ளிகளும் வழக்கம்போல் செயல்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. சமீபத்தில் தொடர்மழை காரணமாக அளிக்கப்பட்ட விடுமுறையை ஈடு செய்யும் வகையில், வியாழக்கிழமை பாடவேளையை பின்பற்றி நாளை பள்ளிகள் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், சென்னைக்கு நாளை கனமழை அலர்ட் விடுக்கப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
Similar News
News February 17, 2026
மீண்டும் மோதும் அஜித் – விஜய் படங்கள்

அஜித்தின் ‘மங்கந்தா’ படம் சமீபத்தில் ரீ-ரிலீஸில் வசூலை வாரிக்குவித்தது. இதன் தொடர்சியாக அவரின் ‘துணிவு’ படம் பிப்ரவரி 20-ம் தேதி ரீ – ரிலீஸ் செய்யப்படுகிறது. அதேநாளில் விஜய்யின் ‘கில்லி’ படமும் களமிறக்கப்படுகிறது. இதனால் இருவரின் ரசிகர்களும் போட்டி போட்டி பிளக்ஸ் வைத்து கொண்டாட்டத்துக்கு ரெடியாகி வருகின்றனர். நீங்க எந்த படத்துக்கு போக போறீங்க?
News February 17, 2026
நிர்வாகிகளை கட்டுப்படுத்த முடியாத காங்.: தமிழிசை

செல்வப்பெருந்தகையால் தங்கள் கட்சி நிர்வாகிகளை கட்டுப்படுத்த முடியவில்லை என தமிழிசை சௌந்தரராஜன் விமர்சித்துள்ளார். காங்கிரஸ் நிர்வாகிகளை பற்றி ஆலோசிக்க மல்லிகார்ஜுன கார்கேவை சந்திக்கும் நிலையில்தான் செல்வப்பெருந்தகை உள்ளதாகவும் சாடியுள்ளார். திமுக – காங்கிரஸ் மோதலால், இண்டியா கூட்டணி பலவீனமடைந்து வருவதாகவும், அதே சமயம் NDA கூட்டணி பலமாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
News February 17, 2026
AI உதவியால் உலகிற்கான தீர்வை உருவாக்குவோம்: PM

டெல்லியில் 5 நாள் நடைபெறும் சர்வதேச AI உச்சி மாநாட்டை PM மோடி திறந்து வைத்தார். இதுதொடர்பான போட்டோஸை X தளத்தில் அவர் பகிர்ந்துள்ளார். புதுமை கண்டுபிடிப்பாளர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களிடையே இருப்பது, இந்தியாவின் திறமை மற்றும் AI திறன் பற்றி அறிய முடிவதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், நாம் அனைவரும் இந்தியாவிற்கு மட்டுமல்ல, உலகிற்கே தேவையான தீர்வுகளை உருவாக்குவோம் எனவும் கூறியுள்ளார்.


