News January 9, 2026

நெல்லை: கீழே விழுந்து பெயிண்டிங் தொழிலாளி பலி.!

image

ராமானுஜம்புதூரை சேர்ந்தவர் இளம்வழுதி (வயது 58). பெயிண்டிங் தொழிலாளியான இவர் நாவல் குளம் கிராமத்தில் ஒரு வீட்டில் பெயிண்டிங் தொழில் செய்து கொண்டிருந்தார். அப்போது ஏணியில் கால் தவறி கீழே விழுந்தார். தலையில் படுகாயம் அடைந்த அவர் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சைக்கு பலனின்றி நேற்று இரவு உயிரிழந்தார். இதுக்குறித்து மூலைகரைப்பட்டி போலீசார் விசாரணை.

Similar News

News January 14, 2026

நெல்லை: கூட்டத்தில் புகுந்த அரசு பேருந்தால் ஒருவர் பலி

image

நெல்லை காந்திநகர் பகுதியை சேர்ந்த பொன் பரமசிவன்(25), டவுனை சேர்ந்த ராஜ கல்யாணி(31) உள்ளிட்டோர் ஒரு குழுவாக நேற்று மாலை திருச்செந்தூருக்கு பாதையாத்திரை சென்றுள்ளனர். கிருஷ்ணாபுரம் பகுதியில் இவர்கள் சென்ற போது நெல்லை – திருச்செந்தூர் சென்ற அரசு பேருந்து பாதையாத்திரை கூட்டத்துக்குள் புகுந்ததில் பொன்பரமசிவன் உயிரிழந்தார். இவருக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

News January 14, 2026

பாளை மத்திய சிறையில் போலீசார் திடீர் ஆய்வு

image

பாளையங்கோட்டை மத்திய சிறையில் 1200-க்கும் மேற்பட்ட கைதிகள் உள்ளனர். இங்கு தடை செய்யப்பட்ட பொருட்கள் உள்ளனவா என்பது குறித்து அவ்வப்போது மாநகர போலீசார் ஆய்வு நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நேற்று போலீஸ் கமிஷனர் மணிவண்ணன் உத்தரவின் படி ஒவ்வொரு அறையாக போலீஸ் படையினர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற இந்த ஆய்வால் சிறை வளாகம் பரபரப்புடன் காணப்பட்டது.

News January 14, 2026

நெல்லை: 50% தள்ளுபடியில் ரூ.3 லட்சம் கடன்

image

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ. 3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு வழங்கப்படும் இக்கடனில், ரூ. 1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற <>இங்கே கிளிக்<<>> செய்யவும் அல்லது அருகிலுள்ள பொதுத்துறை அல்லது வணிக வங்கிகளை அணுகலாம். SHARE பண்ணுங்க.

error: Content is protected !!