News January 9, 2026

சென்னை: வீட்டு பட்டாவில் திருத்தமா? அலைய வேண்டாம்

image

தமிழக அரசால் பட்டாவில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் மற்றும் புதிய உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்க ஆன்லைன் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி உரிய ஆவணங்களுடன் eservices.tn.gov.in என்ற இணையதளம், இ-சேவை மையங்கள் அல்லது ’TN nilam citizen portal தளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். அடுத்து வரும் ஜமாபந்தியில் இவை பரிசீலிக்கப்பட்டு, மாற்றங்கள் செய்யப்படும். இந்த தகவலை ஷேர் பண்ணுங்க.

Similar News

News January 12, 2026

சென்னையில் கேஎஸ்.அழகிரி மனைவி காலமானார்

image

காங்கிரஸ் முன்னாள் தலைவர் கேஎஸ்.அழகிரியின் மனைவி வத்சலா (65). இவர் நீண்ட நாட்களாக உடல்நலக் குறைவால் சென்னையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று (ஜன.11) காலமானார். வத்சலாவின் இறுதிச் சடங்கு கடலூர் மாவட்டம், திருப்பணிநத்தம் கிராமத்தில் இன்று மாலை நடைபெற்றது. இவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் உட்பட பலர் இரங்கல் தெரிவித்தனர்.

News January 12, 2026

சென்னையில் உள்ள பெற்றோர் கவனத்திற்கு…

image

உங்கள் குழந்தையின் பிறப்பு சான்றிதழ் தொலைந்துவிட்டால், கவலைப்பட வேண்டாம். இந்த <>லிங்கை<<>> க்ளிக் செய்து ஆன்லைனிலேயே ஈசியாக பிறப்பு சான்றிதழை பெற்று கொள்ளலாம். அதேபோல், பிறப்பு சான்றிதழில் பிழை இருந்தால் அதையும் திருத்த முடியும். இல்லையென்றால் 94450 61913 என்ற வாட்ஸ் ஆப் எண்ணிலும் ஒரு நிமிடத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். *தெரிந்த நண்பர்களுக்கு மறக்காம ஷேர் பண்ணுங்க*

News January 12, 2026

தூய்மைப் பணியாளர் பத்மாவுக்கு முதல்வர் பாராட்டு

image

சென்னை தியாகராய நகர் வண்டிக்காரன் சாலையில் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது கீழே கிடந்த 45 சவரன் தங்க நகைகளை கண்டெடுத்து பாண்டிபஜார் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். இந்நிலையில் பெருநகர சென்னை மாநகராட்சி தூய்மைப் பணியாளர் பத்மாவை, முதல்வர் ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில் நேரில் அழைத்து பாராட்டினார். அவருக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்து, ரூ.1 லட்சம் பரிசுத்தொகை வழங்கினார்.

error: Content is protected !!