News January 9, 2026
திருவள்ளூரில் 250 கோழிகள் இலவசம்!

திருவள்ளூர் மக்களே.. தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறை சார்பில் நாட்டு கோழி பண்ணை அமைக்க மானியம் வழங்கும் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ், நாட்டுக் கோழி வளர்ப்புப் பண்ணை அமைக்க மொத்த செலவில் 50% மானியம், 250 கோழிகள் இலவசமாக வழங்கப்படுகிறது. விருப்புள்ள நபர்கள், அருகில் இருக்கும் கால்நடை மருத்துவமனை அல்லது கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க!
Similar News
News January 21, 2026
திருவள்ளூரில் தூக்கிட்டு தற்கொலை!

திருவள்ளூர் அடுத்த உளுந்தை கிராமத்தில் உள்ள தனியார் கம்பெனியில் காவலாளியாக பணிபுரிந்து வந்தவர் பாபு(50). நேற்று முன் தினம் அவரது வீட்டில், குடும்பத்தினர் அனைவரும் வெளியே சென்றுள்ளனர். அப்போது, தனியாக இருந்த பாபு, மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
News January 21, 2026
ஆவடி: மகனின் காதலால் தாய் தற்கொலை!

திருவள்ளூர்: ஆவடி அடுத்த பட்டாபிராம் தண்டுரை, மாங்குளம் பகுதியைச் சேர்ந்த தம்பதி பர்ஹான் அலி(61) – வஹிதா பானு(51). இவர்களுக்கு சாகித்(23) என்ற மகன் உள்ளார். இந்நிலையில், நேற்று முன் தினம், தான் ஒரு பெண்ணை காதலிப்பதாக, சாகித் தனது தாயிடம் கூறியுள்ளார். இதனால் மனமுடைந்த வஹிதா பானு அதிகப்படியான முடக்குவாத மாத்திரைகளை உண்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
News January 21, 2026
திருவள்ளூர் இரவு ரோந்து அதிகாரிகளின் எண்கள்

திருவள்ளூர் மாவட்ட காவல்துறை சார்பில் நேற்று (ஜன.20) இரவு முதல் இன்று காலை வரை ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் விவரம், காவல் நிலையம் வாரியாக மக்களின் எளிதான தொடர்பு வசதிக்காக வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் சட்ட ஒழுங்கை உறுதிசெய்யும் நோக்கில் மேற்கொள்ளப்படும் இந்த நடவடிக்கை, மக்கள் தங்களது பகுதிக்கான பொறுப்பு அதிகாரிகளை நேரடியாக தொடர்பு கொள்ளும் வசதியையும் வழங்குகிறது.


